பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நா. பார்த்தசாரதி

ஆரம்பித்தது. வேகத்தைப் பற்றி நினைத்து ஒரிரு கனங்கள் பின்னால் திரும்பிப் பார்ப்பதற்கே நிதானம்

தேவைப்பட்டது. தலைதெறிக்க முன்னோக்கி ஒடுகிற, போதே பின்னால் திரும்பிப் பார்ப்பது என்பது சாத்திய

மில்லை. பின்னால் திரும்பிப்பார்க்க வேண்டுமானால், முதலில் முன்னோக்கி ஓடுவதிலிருந்து விடுபட்டு நிற்க

வேண்டும், அல்லது நிறுத்தப்பட வேண்டும். இப்போது

அவன் தளர்ந்து நின்று போயிருந்தான். அல்லது நிறுத்

தப்பட்டிருந்தான். முன்னோக்கித் தலைதெறிக்க ஓடாத

அல்லது ஓடமுடியாத காரணத்தால் பின்னோக்கித் திரும்

பிப்பார்ப்பது இந்த வினாடியில் சுலபமாயிருந்தது. தான்

ஓடிவந்த ஜெட் வேகத்தில் தனக்குத் தெரியாமல் தன்

சொந்த மகனே மிதிப்பட்டு அழிந்திருப்பானோ? என்கிற பயமும், பதட்டமும் வந்தபோது தான் இன்று அவனு:

டைய ஒட்டமே நின்றது. நலிந்துபோன மனத்தோடு

குழம்பிக் குழம்பி அவன் மன நோயாளியாகவே ஆகியிருந்: தான். அவன் தங்கியிருந்த மாடவீதி மருத்துவமன்ையில் அவனுடைய வழக்கமான டாக்டரோடு அவருக்கு வேண் டிய நண்பரான சைக்கியாட்ரிஸ்டும் அவனை வந்து

பார்த்துக் கொண் டிருத்தார். அந்த டாக்டர்களும் வேணு

கோபால் சர்மாவுமாக அவனுடைய உடல் நிலை தேறு வதற்கு ஒரு தத்ரூபமான நாடகத்தை அடிக்கடி அவன்முன்

நடித்துக்காட்ட வேண்டியிருந்தது. உண்மை நிலைகளை

யும் வேறு விவரங்களையும் அவனிடம், பேசியோ விசா

ரித்தோ, அவனைக் குழப்பாமலிருக்க டாக்டர்களும், சர்மா

வும் உதவியாளன் கன்னையாவும் தவிர வேறு யாருமே

திருவைச் சந்தித்து விடாமலிருக்க ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. திரு எது, எதை விசாரித்தால் எப்படி எப்படி

பதில் சொல்ல வேண்டும் என்று நர்ஸ்களுக்கும், வேலைக்

காரிகளுக்கும் கூட பல ம ை :ன்னே ஸ்பாட்டுடன்

தி: தேதி: దేశీ ::: திேே ச்ரி சைக்ரியாட்ரிஸ்ட்டு திருவைச் சந்திக்குப் பேர்து சர்மா வும் அவரோடு உடனிருந்தார். -