பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 161.

'உங்க மகன் தப்பிச்சுட்டான். மறுபடி ஆபத்தில் சிக்கிக்கக் கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கான். நீங்க கவலைப்படாம இருங்கோ’-என்று சர்மா தன் னிட்ம் கூறும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் திரு அவரிடம் தன் ஆசையை வெளியிடத் தவறியதில்லை.

"சமீ ஒரு தடவை அவனை இங்கே கூட்டிக்கிட்டு வாங்க. இல்லாட்டி என்னையாவது அவன் இருக்கிற எடத்துக்குக் கூட்டிக்கிட்டு போங்க... அவனுக்கு என்னைப் பிடிக்காது! என்னைப் பத்தி ரொம்பக் கண்டிச்சுத் திட்டி எழுதியிருக்கான்.இருந்தாலும் அவன் கிட்ட நான் மன்னிப்புக் கேட்கக் கூட அருகதை இல்லாதவன்...”

இந்த ஆசையை அவன் கண்ணிரோடும், கலங்கி நெகிழ்த்த குரலோடும் வெளியிடும் சமயங்களில் எல்லாம், "கொஞ்ச நாள் பொறுத்துக்குங்கோ! அவன் LDé。75のぶ மெல்ல மெல்ல மாத்தி நானே அவனை இங்கே கூட்டிண்டு வரேன்-என்று பதில் சொல்லி சர்மா திருவைச் சமாளித்துக் கொண்டு வந்தார். திருவுக்கோ தன் மகன் தன்னைப் பார்க்க ஒப்புக்கொண்டு வருவானா என்பதில் சந்தேகமும் தயக்கமும் இருந்தன. லஞ்ச ஊழல் பேர்வழி பதவியை துஷ்பிரயோகம் செய்து பணம் பண்ணியவன், ஏன்றெல்லாம் தன் மேல் ஏற்கெனவே மகனுக்கு இருக்குக் வெறுப்புக்களைத் தவிரக் கொலைக்குத் தூண்டி விட்டு ஆள் அனுப்பியதே தான்தான் என்ற சந்தேகமும், வந் திருந்தால் அவன் எப்படித் தன்னை ஒரு பொருட்டாக - மதித்துச் சந்திக்க வருவானென்ற சந்தேகமும் ւմաՅիւb, தயக்கமும், கூச்சமும் எல்லாம். திருவுக்குள் இருந்தன. வெளியே விவரித்துச் செல்லவே கூடக் கூசும் இரகசியக காரணங்களாக இருந்தன. அவை, தாறுமாறாகக் கரை களை அழித்துக் கொண்டு காட்டு வெள்ளமாகப் பெருகிய காரணத்தால் அருமை மனைவியூை இழந்திருந்தான் அவன். அரசியலில் தன்னை ஆளாக்கி, உருவாக்கிவிட்ட பொன்னுச்சாமி அண்ணனுக்குத் துரோகம் செய்திருந்