பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:2 - நா. பார்த்தசாரதி

தான். சொந்த மகன், மைத்துனன் எல்லோருக்கும் துரோ கங்கள் செய்திருந்தான் துரோகங்களை சகஜமான விளையாட்டைப் போல் செய்கிற பலரை உருவாக்கியிருக் கும் இன்றைய சூழ்நிலைக்குத் தானும் ஒரு முன் மாதிரி ய்ாக வாழ்ந்திருப்ப்தாகவே இப்போது அவனுக்குத் தான் றியது. அவனுடைய எண் ணங்கள் அனைத்துப வெறும் கழிவிரக்க நினைவுகளாகவே இருந்தன. திருத்திக் கொள் வதற்கு வர் ழ்க்கை அதிகமாக மீதமில்லாத காலத்தில் ஏற். படும் இழிவிர்க்க நின்னவுகளால் யாருக்கு என்ன பயன் விளைய் முடியம்?

"நான் முடிந்து கொண்டிருக்கிறேன். என் மகனாவது நல்லவனாக-யோக்கியனாக-யோக்கியதையின் 压fr伊6馆 மாக ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற தாாமீக துணிவுடனும் கர்வத்துடனும் உலகில் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் -புகழ் பெறவேண்டும்’ என்று தனக்குள் பிரார்த்தித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான் திரு. இதுவரை பிரார்த் தனைகளை அவன் கிண்டல் செய்திருக்கிறான். இகழ்ந் திருக்கிறான். ஆனால் இன்றென்னவோ தன்னையறியா மலே தன் அருமை மகனின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யத் தோன்றியது அவனுக்கு அவனுடைய வற்புறுத் தல் பொறுக்க முடியாமல் எழில் ராஜாவைப் பார்த்துப்பேசி அங்கே அழைந்து வருவதாகக் கூறிவிட்டுச் சர்மா புறப் பட்டுப் போன்ார். அவர் போன சிறிது நேரத்துக்கெல் லாம் உதவியாளன் கன்னையா மாலைத் தினசரியுடனும் ஒரு முக்கியமான செய்தியுடனும் திருவைச் சந்திக்க அவசர அவசரமாக வந்து சேர்ந்தான் அப்போது டாக்டர்கள். நர்ஸ்கள் யாரும் திருவின் அருகில் இல்ல்ை. அதனால் கன்னையனுக்குப் ப்ோதுமான தனிமை திரு. விடம் கிடைத்திருந்தது.

24

அவனை இலாகா இல்லாத மந்திரியாக்கி விட்டிருந்: தார்கள். மாதக் கணக்கில் அவன் மருத்துவமனையில் கிடந்ததனால் அவனிடமிருந்த தொழில் வளர்ச்சி இலா காவுக்கு வேறொரு புதிய மந்திரி நியமிக்கப்பட்டும்