பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 169

களாகச் சொல்லி இகழ்வதும் நடைமுறைப்படுத்தப் பெற்று வெகு நாட்களாக அமுலில் இருப்பது அவனுக்கே அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஆகவே தனக்குப் பின் தொழில் மந்திரியாகி இருப்பவனிடம்தான்குறை காண்பது சரியில்லை என அவனே இப்போது தன் மனத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

அறை முகப்பில் சர்மா தென்பட்டார். மகனைப் பற்றிய தகவல் தெரியும் என்பதால் அவரைக் கண்டதுமே அவன் மனத்தில் ஆவலும் பரபரப்பும் முந்தின. சர்மா தனியாக வந்திருப்பதால் மகனை அழைத்து வர முடிய வில்லை என்பதையும் அவனே ஊகித்துக் கொள்ள முடிந் தது. மகன் தன்னைப் பற்றி அவரிடம் என்ன சொன் னான் என்பதையாவது தெரிந்து கொள்ளலாமே என்று உள்மனம் அப்போது படபடத்துத் தவிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. r

25

அப்போதிருந்த அவனுடைய ஆவலையும் பரபரப் பையும் தாமாகப் புரிந்து கொண்டு சர்மாவே சொன்னார்: "கொஞ்சம் பொறுத்துக்குங்கோ! உங்க மகன் ராஜா வுக்கு இன்னும் உங்க மேலே இருக்கிற ஆத்திரம் தணியலே... உங்களைப் பார்க்க வரமாட்டேன்னுட்டான். நானே கொஞ்சம் கொஞ்சமாப் பேசி அவன் மனசை மெல்ல மரத்தப் பார்க்கறேன்.'

இதைக் கேட்டு, திருவுக்கு மிகவும் ஏமாற்றமாயிருந் தது. ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவன் சர்மாவைக் கேட்டான்: - . .

‘'என்ன்ைப் பார்க்கப் பிரியப்படாட்டி நாம வற்புறுத்த வேணாம். அது போகட்டும். ஆனால் எழில் ராஜா' ஏன் இப்போ முன்னே மாதிரிப் பத்திரிகைகளிலே அதிகம் எழுதறதில்லே? இவ்வளவு மாறுதல்கள் எல்லாம் நடந்