பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

沮留{} - நா. பார்த்தசாதி

திருக்கு. என்னிடமிருந்து தொழில் வளர்ச்சி இலாகா பறிக் கப்பட்டு நான் இலாகா இல்லாத மந்திரியாகியிருக்கேன். எனக்கு சலாம் போட்டுக்கிட்டிருந்த தாண்டவராயன் புது மந்திரிக்குப் போடப் போயிட்டாரு நான் ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இப்படி விழுந்து கிடக்கறேன். இதைப் பத்தி ஒண்ணுமே எழுதாமே எப்படி அவனாலே பேனாவை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியுதுன்னு தான் எனக்குப் புரியலே?" -

இந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்த்திராத சர்மா திகைத்து ஓரிரு கணங்கள் பதில் சொல்லத் திணறிப் போனார்.ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே சமாளித் துக் கொண்டு, கடத்தல், கொலை மிரட்டல் எல்லாம் வந்துட்டதாலே கொஞ்ச நாளைக்கிப் பத்திரிகையிலேயே எதுவும் எழுதாமே இருக்கச் சொல்லி நண்பர்களே அவனுக்கு இப்ப அட்வைஸ் பண்ணியிருப்பாங்கன் னு தெரியுது” என்றார்.

அவருடைய இந்தப் பதிலில் சற்றே பூசி மெழுகுவது போன்ற தொனி இருந்ததை உணர்ந்த திரு, 'இது நீங்க ளாகச் சொல்ற சமாதானமா? அல்லது அவனே இப்படிச் சொன்னானா? -என்று அவரை உடனே வினவினான். சர்மா மறுபடியும் சமாளித்துக் கொள்ளத் திணறினார்.

'நீங்க சொல்ற மாதிரி எதுவும் எழுதாமல் சும்மா இருக்கிறது அவனுக்கும் பிடிக்கலைதான். ஆனால் நண்பர்களும் பத்திரிகை நிர்வாகமும் அவனை வற்புறுத் திக் கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு சொல்லியிருக்காங்களாம்.'

'என்னைப் பத்தி இன்னும் என்னென்னல்லாம் சொன்னான்? - - -

சர்மா நேரடியாக மறுமொழி கூறாமல் பேச்சை மாற்ற முயன்றார். மகன் தன்னைப் பற்றிக் கடுங்கோப மும், ஆத்திரமும் உள்ளவனாயிருக்க வேண்டும், அதனால் தான் சர்மா பேச்சை மாற்றுகிறார் என்பதாகப் புரிந்து