உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 17器。

தது மது விலக்து அமுலிலிருந்த காலத்து அரசாங்கங். களில் இருந்த தொழில் வளர்ச்சி, மின்சாரத் திட்டங்கள் எதுவும் தங்கள் ஆட்சியில் இல்லை என்பதும் புரிந்தது. மது: விலக்கு அமுலிலிருந்தால் கள்ளச் சாராயப் பேர்வழிகளா கவும் நீக்கப்பட்டால் கள். சாராயக் கடைகள் வைக்கவும்: கட்சிக்காரர்களுக்குச் சலுகைகள் கிடைத்திருந்தன. தியேட்டர்கள் கட்டுவதற்குத் தாராளமாகக் கடன் ஊக்கம் எல்லாம் தரப்பட்டன. -

ச ராயக் கடைகளையும், தியேட்டர்களையும் தவிர வேறு கனரகத் தொழில்களோ, மின்சார திட்டங்களோ தங்கள் ஆட்சியில் அரை அங்குலம் கூட முன்னேறவில்லை. என்பது இப்போது திருவுக்கே புரிந்தது. -

"குரங்கு கைப் பூ மாலை போல் ஆட்சி அதிகாரங்கள் சீரழிந்து உருக்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பல காலமாகக் குறைசொல்வது நிஜம்தானோ என்று இப். போது திருவுக்கே உறைக்க ஆரம்பித்திருந்தது. உழைப் பில் நம்பிக்கையும், கட்டுப்பாடும், தேச பக்தியும், ஒழுக்க மும் இல்லாமல் மேனா மினுக்கியாக ஓர் இளம் தலை: முறை உருவாவதற்குத் தன்னைப் போன்றவர்கள் மூல. காரணமாயிருந்து விட்டோமோ என்று எண்ணியபோது திருவுக்கே உடல் பதறி நடுங்கியது. பயிர் செய்வதற்கான அருமையான நன்செய் நிலங்களில் வெறும் களை களையே விதைத்து வளர்த்து அறுவடை செய்து கொண்டு. தொடர்ந்து வீழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாய்கிறோமோ என்று. அவனுக்கே பயமாயிருந்தது. -

எதிலும் மனத்தெளிவற்றுத் திரிகிற இந்த இளம் தலை முறையினரின் இடையே தான் தன்னுடைய மகன் தெளி வாகவும் திட்டமாகவும் உருவாகியிருக்கிறான் என்று. நினைக்கும் போது ஒரு விதத்தில் பெருமிதமாக. இருந்தது. அவன் தன்னுடைய முகாமில் தனது நிழலில் வளராமல் தன் மைத்துனனால் தனக்கு எதிர்ான முகாமில்,