பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் . 177

டார்கள். எழிலிருப்பிற்கே போகலாம் என்றான் அவன். வேறு புது இடமாக இருந்தால் நல்லதென்று அவர்கள் நினைத்தார்கள். அவனோ பிடிவாதமாக எழிலிருப்பிற்குத் தான் போக வேண்டும் என்றான். வேகமாகத் தொடங்கி, வேகமாக ஒடி ஒரு சுற்றுச் சுற்றி முடித்துவிட்ட இந்த நிலை யில் தன் வாழ்க்கையை எந்தத் தோடியின் மைதானத்திலி ருந்து தொடங்கினோமோ அந்த இடத்தை அந்தப் பழைய நினைவுகளோடு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது திருவுக்கு. в

எந்த மண்ணில் தளர்ந்து அடிபட்டு விழுந்திருந்த போது அந்த மண்ணின் ஜமீன்தாரைத் தனக்கு முன் கை கட்டி வணங்கி நிற்கச் செய்து பார்க்க வேண்டும் என்று அன்று சபதம் செய்தானோ அந்தச் சபதம் இன்று நிறை வேறி விட்டது. ஆனால் அந்தச் சயத நிறைவு தனக்குள் மகிழ்ச்சியை உண்டாக்காமல் துயரத்தையும், தோல்வி யையும் உண்டாக்கியிருப்பதை அவனே உணர்ந்தான்.

எல்லா ஆசைகளையும் நினைத்தபடி நிறைவேற்றி முடித்துக் கொண்ட பின்பும் உள்ளம் இன்னும் எதற்கோ குறைப்பட்டு நொந்து அழுதது. எதற்கோ தவித்தது. எதற்கோ ஏங்கியது. சர்மாவும், கன்னையனும் அவனு டைய பிடிவாதத்தை மறுக்க முடியாமல் எழிலிருப்பிற்கு அவனை அழைத்துச் செல்லும் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். விமானத்தில் செல்ல முடிந்த பக்கத்து நகரம் வரை விமானப்பயணம், அப்புறம் ஒரு ஏ. சி. காரில் எழிலி ருப்பிற்குப் பயணம் என்று ஏற்பாடாயிற்று. சர்மாவும். கன்னையனும் உடன் செல்வ தென் றும் முடிவாகி

யிருந்தது. . х i

புறப்படும் தினத்தன்று மறுபடி சர்மாவைக் கூப்பிட்டுத் தன் மகன் எழில்ராஜாவைத் தானே நேரில் சென்று சந்திக்க முடியுமா என்று ஆவலோடு விசாரித்தான் திரு. சாக்குப்போக்குச் சொல்லிச் சமாளிக்க முடியாது போகவே