பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 181

கோஷங்களும் மாலைகளும் வரவேற்புக்களும் ஆர வாரங்களும் இல்லாமல் முதலிலிருந்தே ஒரு சாதாரணப் பாமரனாக வாழ்ந்திருந்தால் கூட நன்றாக இருந் திருக்கும். இதுநாள்வரை அவற்றின் சுகங்களை எல்லாம் தாராளமாக அநுபவித்து விட்டு இன்று திடீரென்று சுக மான சொப்பனம் கலைந்த மாதிரித் தனியே தவிப்பது தான் வேதனையாயிருந்தது. கீழே விழ முடிந்த அளவு அபாயகரமான உயரங்களில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தான் விழுவதைப் பற்றிய பயமும் விழுகின்ற அநுபவமும் உண்டு. விழுந்த அநுபவத்தை அவன் இப்போது அடைந்து கொண்டிருந்தான். சம தரையிலிருப்பவர் களுக்கு விழுவதைப் பற்றிய பயமும் இல்லை. விழுகின்ற அநுபவமும் இல்லை என்று தோன்றியது. காரில் எழி லிருப்புக்குச் சென்று கொண்டிருக்கும் போதே தனது எழுச்சியின் முடிவையும் வீழ்ச்சியின் தொடக்கத்தையும் பற்றிச் சிந்தித்தபடியே சென்றான் அவன்.

முன்பெல்லாம் அந்தச் சாலையில் வெய்யில் விழ இடை வெளியின்றிப் பசேலென்று அடிர்ந்த மரங்கள் வரிசையாயிருக்கும். இப்போது சாலையை அகலப்படுத்து கிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டியிருந்தார் கள். இயற்கையைக் கறைப்படுத்துவது போல் வழியில் தென்பட்ட பெரிய பாறைகள் மலைப்பகுதிகளில் எல்லாம் அரசியல் கட்சிகளின் சின்னங்களைச் செதுக்கியிருந்தார் கள். அல்லது தீட்டியிருந்தார்கள். - -

ஊரைச்சுற்றியிருந்த அழகிய மாந்தோம்புக்கள், நெல் வயல்கள் எல்லாம் அழிக்கப்பட்டுச் சிறிதும் பெரிதுமாக வீடுகள் கட்டப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை ஒவ்வொரு கட்சிக்கும்-கட்சியிலிருந்து பிரிந்த குட்டிக் கட்சிகளுக்கு மாகப் பத்து பன்னிரண்டு கொடிக்கம்பங்கள் தென்பட்டன. சாராயக்கடைகளும், கள்ளுக்கடைகளும் முன்பு அவன், பார்த்திராத பல இடங்களில் தென்பட்டன. தாங்கள்

மூ-12 - -