பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 19 :

நமக்கு என்ன ஆச்சு? கடவுள் புண்ணியத்துலே அவுங்க நல்லாவே இருக்கட்டும்ப்பா...' -

'வரவரக் கடவுள். சாமி, பூதம்லாம்கூடப் பணம் படைச்சவனுடைய கையாளுங்க மாதிரித்தான் தோணுது. ஏழைக்கு நல்லது செய்யக் காணோம். ஏழையைத்தான். மேலே மேலே சோதிக்குதுங்க...'

" அப்படிச் சொல்லாதப்பா தம்பீ!’’ “எனக்கென்னமோ வரவர அப்படித்தான் தோணுது. இல்லேன்னா எனக்கு இந்தக்கெடுதல் பண்ணினவங்களை இதுக்குள்ளாரப் பாம்பு பிடுங்கியிருக்க வேணாமா?’’

தெய்வம் நின்றுதான் கொல்லும் தம்பீ! நம்மை மாதிரி அவசரப்படாது...' -

திருமலை பண்டாரத்திற்குப்பதில் எதுவும் கூறவில்லை யானாலும் அவர் கூறியதை ஏற்காத பாவனையில் ஏளன மாகச் சிரித்தான். அவன் உணர்வுகளில் ஒருவிதமாக முரடு தட்டிப் போய் இறுக்கம் வந்திருந்தது. பேச்சில் அது புல்ப்பட்டது.

அவமான உணர்வும், குரோதமும், துவேஷ மும்,' அவனைக் கல்லாக்கியிருந்தன மற்றவர்கள் ஏற்பதை எல் லாம் விரைந்து மறுக்க வேண்டும் என்பது போன்ற ஒரு வேகத்தை அவனுள் மூட்டிவிட்டிருந்தன. உள்பட்டணத் துப் பெரும் புள்ளிகள் எதைஎதை எல்லாம் உயர்த்தி வழி பட்டுத் தொழுகிறார்களோ அவற்றை எல்லாம் தான் எதிர்த்து அவமானப்படுத்த வேண்டும் போல ஒரு வெறி அவனுள் மூண்டிருந்தது. உள் பட்டணத்தாரின் மரியா தைக்குரியவர்கள் எல்லாம் தன்னால் அவமரியாதைப் படுத்துவதற்குரியவர்கள் என்று அவன் கருதினான். நியதி நிர்வாகம் எல்லாவற்றையும் ஏற்காமல் எதிர்க்க வேண்டும். என்பது போன்ற ஓர் கூர்மையான ஆண்டி-எஸ்டா பிலிஷ்மென்ட் உணர்வு அவனுள் முற்றியிருந்தது தன் பிறவியிலேயே அவமானப் பட்டத்தைச் சேர்த்து ஒட்ட வைக்க விரும்பும் அந்த கிருஷ்ணராஜ உடையார், தங்க