பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நா. பார்த்தசாரதி

மேலும் அவர் குடும்பத்தின் மேலும் ஒருவகை மரியாதை யும் அன்பும் நீடித்தன.

பொன்னுச்சாமியம்ை போலவே வெட்டரிவாள் மீசை யும் உயரமும், பருமனுமாகத் திருமலை பார்க்கிறவர் களுடைய மிரட்சியைச் சம்பாதிக்கும் ஒர் ஆகிருதியை அடைந்திருந்தான். பொன்னுச்சாமி சொல்லித் துண்டிய தன் பேரில் ஒரு வஞ்சாயத்துத் தேர்தலில் கூட உள்பட் டனத்துக்காரர்கள் நிறுத்தியிருந்த மலையப்பன் என்ற வேட்பாளரை எதிர்த்துத் திருமலை போட்டி போட்டான். தோற்றுவிட்டது. ஆனாலும் அவன் நம்பிக்கையிழந்து விட வில்லை. தேசடி மண்டபத்தை ஒட்டி ஒரு தங்குமிடம் சிறிய வாசகசாலை எல்லாம்கூட ஏற்படுத்திக்கொண் டாயிற்று. இப்போதெல்லாம் முழு நேரமும் அவனால் கடையில் இருக்க மூடிவதில்லை, சாதிக்காய்ப் பெட்டி யைக் குப்புறக் கவிழ்த்து எளிதாகவும், சிறியதாகவும் ஆரம்பிக்கப்பட்ட கடை மேலும் வளர்ந்து பெரிதாகிப் பெட்டிக் கடையாக மாறியிருந்தது. இரண்டு பையன்கள் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். சர்பத் கலக்க, இளநீர் வெட்டித்தர என்று உதவிக்கு ஆள் வேண்டியிருந்தது. - . . . . . ஒருநாள் மாலை பொன்னுச்சாமி அண்ணன் வேலையாக இன்னொரு தொண்டருடன்-அவரும் இயக் கத்தைச் சேர்ந்தவர்கள் - மோட்டார் சைக்கிளில் திரு மலையைத் தேடித் தேரடிக்கு வந்து பேசிக் கொண்டிருந் தார். மாலை வேளையாகையினால் கோயில்களுக்குப் போகும் பெண்களின் கூட்டம் அதிகமாகி இருந்தது. நல்ல வியாபார நேரம். அன்று ஏதோ விசேஷ நாள் வேறு. வழக்கத்தைவிட அதிகக் கூட்டமாயிருந்தது அன்று. μ அப்போது கடையருகே சண்பகம் வந்து கூசினாற் போல் ஒதுங்கித் தயங்கி நிற்பதைத் திருமலைதான் முதலில் பார்த்தான். அவனோடு பேசிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியும் அவளைப் பார்த்துவிட்டார். ' 'இந்தா