பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கல்ை - - 27

திரு முதல்லே தங்கச்சிக்கு என்னவேணும்னு கேளு! நாம் அப்புறம் பேசிக்கலாம்’-பொன்னுச்சாமி அண்ணன் செல்லமாக அவனைத் 'திரு” என்று மட்டுமே கூப்பிடுவது வழக்கமாகியிருந்தது. : சண்பகத்துக்கு அவள் எதிர்பார்த்த தனிமை கிடைக் காததால் பொன்னுசாமியும், அவரோடு வந்திருக்கும் ஆளும் பேசிவிட்டுப் போகட்டும் என்று அவள் தயங்கினாற் போலத் தோன்றியது. திருமலை விடவில்லை. கடையிலி ருந்து இறங்கி வந்து அவளை மலர்த்த முகத்தோடு எதிர் கொண்டான்.

"'என்ன சண்பகம்? உன்னைப் பார்த்து மாசக் கணக் கில் ஆகுதே? என்ன காரியமா வந்தே?’’ -

"'உங்ககிட்டத் தனியாக் கொஞ்சம் பேச வேண்டி’ 'யிருக்கு. அந்த அண்ணன் போன பெறவு மறுபடி வந்து பார்க்கிறேன். ' - - அண்ணன் இருந்தா உனக்கென்னா வந்திச்சு? நீ

சொல்ல வந்ததைச் சொல்லேன் -

இல்லே! நான் கோயில் பக்கமாகப் போயிட்டு மறுபடி வரேன்-என்று வெட்கத்தோடு நழுவி ஒதுங்கி நகர்ந்து விட்டாள் சண்பகம். -

அவள் ஏதோ ஒரு முக்கிய வேலையாக வந்திருக்க வேண்டும் என்பது மட்டும் திருமலைக்குத் தோன்றியது. அது என்ன வேலையாக இருக்குமென்றுதான் புரிய வில்லை. - - - -

4

பொன்னுச்சாமியும் உடன் வந்திருந்தவரும் புறப் பட்டுப் போனபின் மறுபடி சண்பகம் திரும்ப வந்து தனிமையில் தன்னிடம் தெரிவித்த விஷயங்களை கேட்டு திருமலை யோசனையிலாழ்ந்தான். ஒரிரு விநாடிகள் சண்பகத்துக்கு என்ன பதில் சொல்வதென்றே அவனுக்குப் அரியவில்லை. -