பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நா. பார்த்தசாரதி

விநாடிகள் யோசித்த திருமலை அருகே நெருங்கிச் சண்ப கத்தின் கைகளைப் பற்றியபடி ஆறுதலாக அவளிடம் சொன்னான்: -

'நீ கவலைப்படாதே சண்பகம்! உங்க ஐயாகிட்டப் பேசலேன்னாலும் மருந்துக் கடை அண்ணன் மூலமா மறவநத்தத்துக்குப் போயி எப்படியாச்சும் இந்தக் கலியாணத்தை நிறுத்திட முடியும்னு தோணுது! ஆனா இந்த விஷயம் நமக்குள்ளே பரம ரகசியமாயிருக்குனும்-'

அவளுடைய விசும்பல் நின்றது. 'இதை நிறுத்திடறதோட உங்க கடமை முடிஞ்சதா ங்க நெனைக்கிறீங்களா?' - - 'இல்லே! ஆனா முதல்லே இதை நிறுத்தலாம்! மத்தது கொஞ்சம் பொறுத்து யோசிக்கலாம்...”

‘'எத்தனை காலம்தான் யோசிச்சுக்கிட்டே இருக்கப் போlங்க..." -

'இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடறதா இருந்தா யோசிக்காம உடனே எதை வேணாப்பண்ணிடலாம். ஆனா நான் இந்த ஊர்ல தொடர்ந்து இருந்து என் எதிரிங்க கண் காணச் சாதிக்க வேண்டியது நெறைய இருக்கு! யோசனைக்கு அதுதான் காரணம் சண்பகம்!’’'ச்ரி செய்யுங்க. உங்களை நம்பி இந்த நந்தவனத் துக்குள்ளே ஒருஜீவன் தவிச்சுக்கிட்டிருக்குங்கறது மட்டும் ஞாபகமிருக்கட்டும்.’’ * - - -

இருளில் ஒற்றையடிப் பாதை வழியே குடிசையை நோக்கிப் போகும் அவளைக் கவனித்தபடி சிறிது நேரம் பாக்கு மரங்களின் கீழே சுகமான அந்தக் கமுகம்பாளைகள் பூத்திருக்கும் வாசனையை நுகர்ந்தபடி நின்றான் திருமலை, சண்பகத்தின் நினைவுகளும் அந்த வாசனை யும் சேர்ந்தே மனசைக் கிறக்கின.

அன்றிரவு நந்தவனத்திலிருந்து அவன் தேரடிக்குத் திருப்பிப் போகவில்லை. அகாலமானாலும் பரவாயில்லை என்று மறவர் சாவடி வீதியிலிருந்த மருந்துக்கடை அண்