பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் -

ணன் பொன்னுச்சாமியைத் தேடிச் சென்றான், பொன் லுச்சாமி அண்ணனே அவனிடம் பலமுறை சொல்லிருந் தார். இதப் பாரு தம்பீ! நீ எப்ப நம்ம ஆள்னு ஆயிட் டியோ அப்பவே என் குடும்பத்திலே ஒருத்தன் மாதிரித் தான். எதினாச்சும் நல்லது கெட்டதுன்னு:என்னை அவசர மாப் பார்க்கணும்னா உடனே தேடி வந்து கூப்பிடு. இப்ப அண்ணனைப் பார்க்கலாமா, அப்புறம் பார்க்கலா மான் னு யோசிச்சுக்கிட்டு நிற்காதே. நீ சாமத்துக்கு வந்து எழுப்பினாலும் உனக்கு ஒரு கெடுதல்னா உடனே ஒடியாந்துடுவேன்' -

இது அவ்வளவு அவசரமான விஷயம் இல்லையென் றாலும் அண்ணனைப் பார்த்து உடனே சொல்லிவிட வேண்டும் என்று எண்ணினான் திருமலை. நல்லவேளை யாக அவன் போய்ச் சேர்ந்த போது மருந்துக் கடை அண்ணன், வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வெற் றிலை போட்டுக் கொண்டிருந்தார். வேறு யாரும் கூட இல்லை தனியாகத்தான் இருந்தார். -

'வாங்க தம்பீ! ஏது இந்த நேரத்துக்கு? ஏதாவது அவசரமா?" wn

"ஒண்னுமில்லே...நீங்க இருந்தப்பவே அந்தப் பண் டாரத்துப் பொண்ணு கடைக்கித் தேடி வந்திருந்திருச்சு... அதான் அண்ணனே பார்த்தீங்களே...?’’

"ஆமா! அதுக்கென்ன?”

திருமலை அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து தணிந்த குரலில் எல்லா விவரத்தையும் சொன்னான். பொன்னுச் சாமி கவனமாகக் கேட்டுக் கொண்டார். பின்பு உறுதி கூறினார்: ' - -

போயி நிம்மதியாத் தூங்குங்க தம்பி அந்த மறவ

நத்தத்துப்பண்டாரம் இந்த ஊர்த் திசையிலே தலைவச்சுக் கூடப் படுக்கமாட்டான். நான் பார்த்துக்கிடுதேன்...”*