பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நா. பார்த்தசாரதி

'இராவணன்" என்று பெயர் சூட்டினார். சண்பகத்துக்கு இந்தப் பெயர் அறவே பிடிக்கவில்லை என்றாலும் சகித் துக் கொண்டாள். தன்னளவில் அவள் குழந்தையை *ராஜா' என்றே கூப்பிட்டுக் கொஞ்சினாள்.

"என்ன தங்கச்சி! நான் ஒரு பேரு வச்சிருக்கேன். நீ பாட்டுக்கு ராஜா'ன்னு வேற பெயரைச் சொல்லிக் கூப்பி டறே? என்று எ ப் போ தா வது பொன்னுச்சாமி அண்ணன் சண்பகத்தைக் கேட்டால், உங்க ராவணனும் ஒரு ராஜாவாகத்தானே இருந்தான்? அதான் "ராஜா'ன்னு கூப்பிட்டுக்கிட்டிருக்கேன்’ என்பதாகப் பதில் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஒரு மலையருவியிலிருந்து தண்ணிர் கொட்டுகிற மாதிரி வார்த்தைகளை அள்ளிக் கொட்டியே படிப்படியாய் மக்களை மலைக்க வைக்கும் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவனாகி விட்டான் திருமலை. உள்ளூரில் யாரையோ எதிர்க்கும் முனைப்பில் ஆரம்பித்த அவனது மேடைப் பேச்சு மெல்ல வெளியூர்களிலும் அழைத்து மேடை போட்டுக் கேட்க விரும்புகிற ஒன்றாகி விட்டது. மிகக் குறைந்த அடிப்படைக் கல்விகூட இல்லை என்றாலும் வாக்குக் சாதுரியத்தால் மிகப் பெரிய பேச்சாளனாகி விட்டான். அவன் தங்கள் இயக்கத்தின் மேடை ஒக்க பிலேரி'யில் அவன் பிரமாதமாகத் தேறிவிட்டான். காங் கிரஸ் கூட்டங்களில் மகாத்மாகாந்தி என்றும், நேரு என்றும் ராஜாஜி என்றும் கூறினால் தங்கள் கூட்டங்களில் காந்தியார் என்றும், நேரு பெ ரு ம க னா ர் என்றும் ஆச்சாரியார் என்றும் கூற வேண்டும் என்பது அவனுக்கு அத்துபடியாகியிருந்தது. மனிதர்களை இன்ஸ்டண் டாகப் புகழுவதற்கும் தாக்குவதற்கும் தோதான தமிழ் வார்த்தைகள் அவனுக்கு இலகுவாகப் பிடிபட்டிருந்தன. முன்பெல்லாம் இயக்கத் தொண்டர்களும், வெளியூர் அன்பர்களும் பெரன்னுச்சாமியை அண்ணன் என்று மரியாதையாக அழைத்ததைப் போல் அவனையும் திரு