பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - நா. பார்த்தசாரதி

வெட்டுடையார் கோயிலுக்கு இரகசியமாகப் போய் வந்தாள் என்பதைத் திருமல்ை கேள்விப்பட்டிருந்தான். அடுத்த இரண்டு அட்டாக் குகளால் தளர்ந்து படுத்தபின் அண்ணன் பல விஷயங்களில் மென்மையாகி மாறியிருப் பது திருழலைக்குத் தெரிந்தது. பலவற்றில் நிதானமாகி யிருந்தார். வீணாக மனிதர்களை விரோதித்துக் கொள்ளக் கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இப்போது வந்திருப் பது புரிந்தது. திருமலை எவ்வளவோ மன்ற டியும் பொன்னுச்சாமி அண்ணன் அந்தப் போராட்டத்திற்குச் சம்மதிக்கவில்லை.

'பொம்பளைங்க குளிச்சுப்போட்டு ஈரத் துணியோட அரச மரத்தைச் சுற்றி வர்ரப்ப-நாம தடித்தடியா ஆம் ளைங்க போயி நின் னுக்கிட்டு மறியல், அது இதுன்னு: வழி மறிச்சா நம்ம பேர் தான் கெட்டுப் போகும். நமக்கு அவநம்பிக்கைப்பட எத்தினி சுதந்திரமும், உரிமையம் இருக்குதோ அத்தினி சுதந்திர மும் உரிமையும் அவங். களுக்கு நம்பிக்கைப்படறதிலேயும் இருக்கு. மூட நம்பிக் கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாமே ஒழிய நேரடி நடவடிக்கையிலே எறங்கிடப்படாது." -

ஈரோட்டிலிருந்து ஐயா எப்போது பொதுக் கூட்டத் துக்கு வந்தாலும் கூட்ட மேடையில் ஐயாவின் காலடியில் அமர்கிற அளவு ஈடுபாடுள்ள அண்ணனா இப்படிப் பேசு. வது என்று வியந்தான் திருமலை. பூரீராமர் பட்டாபி ஷேகப் படத்தில் சிறிய திருவடியாகிய அநுமன் ராமபிரா னின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருப்பது போலதான் ஐயா பேசும் கூட்டங்களில் அவர் காலடியில் அம்ர்ந்திருப். பார் பொன்னுச்சாமி வயதும், தளர்ச்சியும், விரக்தியும் அவரைக் கூட இப்படி மாற்றியிருப்பது தெரிந்தது. இன்று! -

அப்போது அவர் சொன்னபடி செய்யாமல் அரச மரத் தடியில் மறியலில் ஈடுபடுவது என்று திருமலையும் மற்ற இளைஞர்களும் தாங்களாகவே முடிவு செய்தனர் இளங்.