பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் . 43

கன்று பயமறியாது என்பது போல் ஏதாவது ஒரு போராம். டத்தை நடத்திப் பேர் வாங்கிவிட வேண்டும் என்று மட்டுமே துறுதுறுப்பாயிருந்தார்கள் அவர்கள்.

ஒரு நல்ல ஆடி வெள்ளிக்கிழமையன்று குளித்து விட்டு ஈர உடையோடு அரசமரத்தைச் சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண்களை வழி மறித்தாற் போல் அணுகி, "அரச மரத்தைச் சுற்றுவதை விட்டுவிட்டு, ஆண் பிள்ளையைச் சுற்றினாலும் பயனுண்டு -என்றும், அரசமரம் குழந் தையைக் கொடுக்காது-அதைச் சுற்றுவது அறிவுடமை ஆகாது - என்றெல்லாம் கேர்ஷம் போட்டார்கள். இதைக் கண்டு பெண்கள் பயந்து சிதறி ஓட விஷயம், போலீஸ் வரை போய்த் தகராறு ஆகியது. ஈவ் டீலிங், அதுமதி பெறாமல் மறியல் செய்தது ஆகிய குற்றச்சாட்டுக் களைச் சுமத்தி, திருமலை முதலிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், மறிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தியின் கணவன், ஆத்திரத்தோடு. 'ஏன்ய்யா! நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிங்களோட பிறந்தவங்கதானா? உங்க அக்காவோ, தங்கையோ, சம்சாரமோ தெருவிலே இப்படி எவனாலேயோவது வழி மறிக்கப்பட்டால் எப்படி இருக் கும்?'-என்று திருமலை வகையறாவைப் பார்த்துக் கூப் பாடு போட்டான். பொன்னுச்சாமி அண்ணனைப் போன்ற வர்கள் ஒரளவு, கெளரவத்தோடும், பண்பாடோடும் வளர்த்திருந்த இயக்கம் இந்த அரசமர மறியல் போராட் டத்தால் கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேர்ந்து விட்டது. ஊர் நடுவிலும் விவரத் தெரிந்தவர்களிடமும் இப்படித் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்தாலும், இயக்க இளை ஞர்களிடையே பொன்னுச்சாமி அண்ணனை விடத் திரு மலை அண்ணன் தான் மிகவும்-தீவிரமான கொள்கைப் பிடிப்பிள்ள ஆள் என்பது போல் ஒரு பெயரை இந் ப் போராட்டம் ஏற்படுத்தியிருந்தது. தொண்டர்கள் தன்னி டமே இப்படிச் சொல்லித் தன்னைப் புகழ்ந்தபோது திரு மலைக்கு முதலில் அது பிடிக்கவில்லை என்றாலும் அவர்