பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . நா. பார்த்தசாரதி

மட்டும் கொடுக்கவில்லை. அன்றிரவு எப்படியும் அவனி டம் கண்டித்துப் பேசி அந்தப் பத்திரிகையையும் காட்டிவிட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தாள் அவள். நான் நட்சத் திரம் பார்க்காமல், தாலி சடங்குகள் இல்லாமல் நடந்த கல்யாணமாதலால்தான் இப்படியெல்லாம் ஆகி விட் டதோ என்று கூட அவளுடைய மனத்தில் பயம் ஏற்பட் டது. இப்படிப்பட்ட ஒர் ஆளையா காதலித்து, உருகி உயிரைவைத்துப் பிரியம் செலுத்தி மனந்தோமென்று எண்ணியபோது அவளுக்கு வேதனை தாங்க முடிய வில்லை. கோபித்துக் கொண்டு போய் விடலாமென்றால் எங்கே போவது? தாயும் இல்லை, தந்தையும் இல்லை. உடன் பிறந்தவனோ பேச்சு வார்த்தையின்றி ஒதுங்கி விட்டான். திருமலையிடம் பேசி அவனைத் திருத்த முடியு மென்று அவளுக்கு நம்பிக்கையுமில்லை.

கொஞ்ச காலத்துக்கு முன்பு பொன்னுச்சாமி அண் னன் உயிரோடிருந்த போது இப்படி நடந்திருந்தாலா வது அண்ணனை விட்டுக் கண்டிக்கச் சொல்லியிருக்க லாம். இப்போது அண்ணனும் இல்லை. இரவுச் சாப்பாடு முடிந்து குழந்தையைத் தூங்கச் செய்தபின் தானே'அவனி டம் நைச்சியமாகப் பேச்சை ஆரம்பித்தாள் சண்பகம்.

மெல்ல வெற்றிலையை மடித்து நீட்டிக் கொண்டே, முன்னெல்லாம் எங்கிட்டே ரொம்பப் பிரியமா இருப் பீங்க...இப்ப வர வர வெளியூருக்குப் போனாத் திரும்பி வர்ரப்ப ஒரு முழம் பூக் கூட வாங்கி வர்றதில்லே நீங்க...' என்று கெஞ்சலாகத் தொடங்கினாள்.

"எங்கே முடியுது?... வரவரப் பொது வாழ்க்கையும் கட்சி வேலையுமே நேரத்தை எல்லாம் முழுங்கிடுதே."

கட்சி மட்டும்தானா? உங்க நேரத்தை இப்ப யார் யாரோ முழுங்கறாங்க!”

‘'நீ என்ன சொல்றே சண்பகம்’- அவன் கை அவள் மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாங்கிக் கொள்ளாமல் சற்று முரட்டுத் தனமாகவே விலக்கியது.