பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60° நா. பார்த்தசாரதி

இந்த மனுஷனை நம்பி வந்தே இது பழைய ஊரா இருந்தா ஊராசே இப்ப இவன் பண்ற அக்கிரமத்தைத் தட்டிக் கேட்பாங்க. பழைய சமூகக் கட்டுப்பாட்டிலே தனி மனிதன் தப்பாவோ, தாறுமாறாகவோ நடந்துக்கிடறது. அவனோட சொந்த விஷயம்னு விட்டுட்டு ஒதுங்கிப் போயிட மாட்டாங்க. உரிமை எடுத்திட்டுக் கண்டிப்பாங்க. ஒரு தெருவிலே ஒரு வீட்டிலே தீப்பிடிச்ச பக்கத்திலேயும் பரவிடக் கூடாதுன்னு ஊர் பூரா ஒடியாந்து தீயை அணைக்கிற மாதிரித்தான் அன்னிக்கி இதுவும்இருந்திச்சு. ஒரு காட்டிலே நெருப்புப் பத்திக்கிட்டா எல்லா மரமும் தான் அழியும்கிற மனப்பான்மை அன்னிக்கி இருந்திச்சு. பெரியவங்க கண்டிப்பாங்களேங்கிற பயம் அன்னிக்குப் பெரிய அம்சமா இருந்து தப்புப் பண்றவங்களைத் தடுத் திச்சு. தப்புத் தண்டாவுக்குப் போனாப் பாவம், சாமி கண்ணை அவிச்சுப் போடும்னு நம்பிக்கை வச்சிருந்தர்ங்க இன்னிக்கிப். பயமும் இல்லே...நம்பிக்கையும் போச்சு. யாரும் எதுக்கும் பயப்பட வேணாம்னு ஆயிப்போயிடிச்சி, யாரும் எதையும் நம்பாத படியும் பண்ணிட்டாங்க தனி மனுசன்'ஒழுக்கங் கெட்டுப் போனா அது மொத்த சமூகத் தையும் உடனே பர்திக்கலேன்னாலும் படிப் படியாப் பாதிக்கத்தான் செய்யும், தனி மனித ஒழுக்கத்தில் பிடிக்கிற தீயாலே சமூக ஒழுக்கமும் பற்றிக்கொண்டு எரிந்து சிதைவது தவிர்க்க முடியாமப் போயிடும்! இன்னிக்கு யாருக்குமே அது புரியறதில்லே சண்பகம்! தேவைக்கு மேலே தனி மனுஷனுக்குச் சுதந்திரம் கொடுத் திட்டா அது இப்பிடித்தான் ஆகும்டி.

"யாரு குடுத்தாங்க ஆச்சி? எல்லாம் இவங்களா எடுத்துக்கிற சுதந்திரம்தானே?’’ .

"அதில்லேடி சமூகக் கட்டுப்பாடு, பொது ஒழுக்கம் லாம் வேண்டாம்கிற அளவு அந்த சுதந்திரம் வந்திரிச்சு. கட்டுப்புடில்லாத சுதந்திரம் இந்த மாதிரித்தான் ஆகும். -