பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நா. பார்த்தசாரதி

மின்னிடுதல் கண்டு பெருமிதப்படுகிறோம் நாம். தமிழி னத்தின் வெற்றி இது - என்று இடி குரலில் முழங்கிய போது, கூட்டத்திலிருந்து ஒரு குரல் இடைமறித்தது. அள்ளி முடித்த கட்டுக்குடுமியும் பட்டை பட்டையாய் விபூதிப் பூச்சுமாயிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர்: 'திருக்குறளை ஒருதரம் புரட்டிப் பார்த்து விட்டாவது பேச வரக் கூடாதா அப்பா-என்று கேட்டு விடக் கூட்டமே கொல்லென்று சிரித்து விட்டது. திருக்குறளில் இருப்பதே மொத்தம் ஆயிரத்து முற்நுாற்று முப்பது குறள் தான் என்ற விவரம் அன்று வரை அவனுக்குத் தெரியாது. இந்த மாதிரி தர்ம சங்கடமான நிலைமைகளைத் தவிர்க்க எண்ணி யாரிடமாவது கொஞ்சம் முறையாகத் தமிழ்படிக்க எண்ணினான் அவன். - -

யாரிடம் தமிழ் படிக்கலாம் என்று யோசித்த பேர்து எழிலிருப்பு நகரின் தமிழ்ப் புலவர்கள் ஒவ்வொருவராக அவனது நினைவுக்கு வந்தனர். - -

1. உள்பட்டணம் சித்தாந்த ரத்நாகரம் சிவவடிவேல் உடையார், 2. அஷ்டாவதானம் அரியநாயகத் தேவர், 8. புலவர்-பண்டித வித்வான்-வேணுகோபாலசர்மா,

இந்த மூவரில் சிவவடிவேல் உடையார் திருமலையின் பேரைக் கேட்டாலே சிவசிவ என்று காதைப் பொத்திக் கொள்வார். தேவருக்கும் அவனுக்கும் ஒத்து வராது. ஒய்வு பெற்ற டிஸ்ட்ரிக் போர்டு தமிழாசிரியரான சர்மா விடம் கற்கலாம் என்றால் கொஞ்சம் தயக்கமாயிருந்தது. பாமர மக்கள் தன்னையே பெரும் புலவர் என்று நினைத் துக் கரகோஷ்ம் செய்கிற அளவு புகழுள்ள தான் போய் ஊர் பேர் தெரியாத சர்மாவிடம் தேடித் தமிழ் கற்பதா என்று கூச்சமாகக் கூட இருந்தது. ஆனால் சர்மா பயந்த சுபாவமுள்ளவர். வரச் சொல்லிக் கூப்பிட்டனுப்பினால் கூட வந்து விடுவார். வறுமையில் சிரமப்படுகிறவர், கொஞ்சம் பண உதவி செய்தால் கூட் அதிகம் இழுத்த,