பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 66 நா. பார்த்தசாரதி:

விருப்பத்தைத் தெரிவித்தான். கேட்டு விட்டு சர்மா சிரித்தார். ... "ஏன் சிரிக்கிறீங்க சாமி? :

தயவு செய்து என்னைச் சாமீன்னு கூப்பிடா தீங்கோ! எனக்கு அது பிடிக்காது! சார்னாலே போதும், சார் பிடிக்கலேன்னா ஐயான்னு சொல்லுங்க. இதெல்லாம் உங்களுக்கு அவசியமான்னு நினைக்சேன். சிரிப்பு வந்து டுத்து. நீங்கதான் தமிழ்லே சரமாரியா மேடையிலே பேச றேளே, இன்னும் என்ன கத்துக்கணும்?'

  • முறையா இலக்கண இலக்கியமெல்லாம் தெரி யணும்.’’ -

'அதுக்குவேண்டிய பொறுமையும் அவகாசமும் உங்களுக்கு இருக்கா? -

"இருக்கோ இல்லியோ...உண்டாக்கிட்டே தீரணும்! நான் ஊர்லே இருக்கறப்பல்லாம் ஆளனுப்பறேன். ஒரு நடை வந்திட்டுப் போயிடுங்க... மாசம் அம்பது ருபா குடுத் திடறேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...' - என்ன கண்டிஷன்...?” . நான் உங்ககிட்ட ட்யூஷன் படிக்கிறேன்னு யார் கிட்டவும் மூச்சு விடப்படாது...' - . .”

薩 豪 . ،

呜爆球 始 眼

வேணும்னா நட்பு முறையிலே நானும் திருவும் அடிக்கடி சந்திச்சுப் பேசறதுண்டுன்னு சொல்லிக்குங்க. எனக்கு அதிலே ஆட்சேபனை இல்லே. தலைவர் திரு. சர்மாகிட்ட ட்யூஷன் படிக்கிறாராம்னு எனக்குக் கெட்ட பேராயிடப்படாது.' . . . . . . 'இதுல கெட்ட பேருக்கு என்ன இருக்கு - என்று கேட்க நினைத்துக் கேட்காமலே அடக்கிக் கொண்டார்.