பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 67."

சர்மா. இன்றைய நிலையில் மாதம் ஐம்பது ரூபாய் என்பது அவருக்குப் பெரிய வரவு. அந்த வரவை இழக்க விரும்பாமல் சம்மதித்தார் அவர். படிக்க ஆசை. அதே சமயம் இன்னாரிடம் படிக்கிறோம் என்பது வெளியே தெரியக்கூடாது என்று ஒரு கூச்சம். அவன் சரியான அரசியல் வாதியாக நடந்து கொண்டான். -

மாதத்தில் நாலைந்து நாள் தான் அந்த ட்யூஷன் சாத்தியமாயிற்று. மற்ற நாட்களில் திருமலைக்கு நேரம் கிடைக்கவில்லை. செந்தமிழ் நாவலர் என்று மக்கள் தனக் குச்சிறப்புப் பட்டம் கொடுத்துத் தன்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தான் ஒர் ஒய்வு பெற்ற தமிழ் வாத்தியாரிடம் படிக்கிறோம் என்பது வெளியே சிறிதும் தெரிந்து பாவி விடக்கூடாது என்பதில் அவன் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தான். அதற்காக அதிகக் கவனம் எடுத்துக் கொண்டான். - - யர்ப்பிலக்கணம் படிக்கையில் 'அகர முதல் எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உல்கு'- என்று குறளை அவன் கைப்பட எழுதி அசை, சீர் தளை பிரித்துக் காட்டச் சொல்லி அவனுக்கு ஒரு ஹோம் ஒர்க் கொடுத்திருந்தார் சர்மா, அகற முதள எளுத்தெள்ளாம் ஆதி பகவண் முதற்றே உளகு' என்று திரும்லை பதிலுக்கு எழுதியி ருந்த இலட்சனத்தைப் பார்த்துச் சர்மாவுக்கு பகீரென்றது: தமிழில் இவ்வளவு எழுத்துப் பிழையோடு எழுதுகிற ஒருவனை மக்கள் 'செந்தமிழ் நாவலர்’ என்று அழைக்கத் துணியும் அளவிற்குப் பாமரர்களாகவும் ஒன்றை உணர்ச் சிப் பூர்வமாக மட்டுமே கண்ணை மூடிக் கொண்டு அளந்து முடிவு செய்கிறவர்களாகவும் இருந்தது சர்மாவுக்கு வியப்பை அளித்தது. அன்றிலிருந்து திருமலையை நிறைய எழுதச் செய்து திருத்திக் கொடுக்கத் தொடங்கி னார் அவர். சர்மாவின் அடக்கமும் தனக்குச் சொல்லிக் கொடுப்பதை இரகசியமாக வைத்திருக்கும் குணமும் திருமலையைக் கவர்ந்தால் அவரது டியூஷன் மாதச்