பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*58 நா. பார்த்தசாரதி

சம்பளத்தை எழுபத்தைந்து ரூபாயாக உயர்த்தினான் அவன். அவரை அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அந்த ஆண்டின் இறுதியில் திருமலையின் இரண்டிா வது கொள்கைப் பரப்பு நாடகமாகிய திராவிட முழக்கம்' அரங்கேறிச் சக்கைப் போடு போட்டது. முதல் நாடக மாகிய வேரிற் பழுத்த பலா வை விட, இதற்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்தப் புதிய புகழ் வேறொரு பளபளப்பான மாறுதலுக்கு அவனை விரைந்து இட்டுச் சென்றது. - -

- 10

மேடை நாடகங்களுக்கும் இயக்கம் தொடர்புடைய இருபொருள்படும் வசனங்களுக்கும், பாடல்களுக்கும், திருமலை பெற்ற பாராட்டும், கை தட்டுக்களும், ஒரு சினிமா கம்பெனி அதிபரைப் பெரிதும் கவர்ந்தன். அவர் தாம் தயாரிக்க இருந்த ஒரு படத்திற்குச் சென்னையில் வந்து தங்கி வசனம் எழுதிக் கொடுக்கும்படி திருமலையை கேட்டார். ஒருபுறம் அவனுக்கு மலைப்பாயிருந்தாலும் மறுபுறம் அதில் ஈடுபட வேண்டுமென்று ஆசையாகவும் இருந்தது. பெருவாரியான மக்களைக் கவர்ந்து தன்பக்கம் இழுக்க அது ஒரு சாதனம் என்று அவனுக்குப் புரிந்திருந் தது. இயக்கமே அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் பதவியிலிருக்கும் அமைச்சராக எழிலி ருப்புக்கு விஜயம் செய்த சின்னக் கிருஷ்ணராஜனுக்குளதி ராக அவனும் இயக்கத் தோழர்களும் கறுப்புக்கொடி கர்ட் டினார்கள். காங்கிரஸ் அமைச்சராகப் பதவியிலிருந்த சின்ன உடையார் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்க ளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதைக் காட்ட வும் மதச்சார்பற்ற அரசின் பிரதிநிதியாகிய உடையார் எழிலிருப்புத் தேரோட்டத்தில் முதல் வடம் பிடிக்க வருவ தைக் கண்டித்தும் கறுப்புக்கொடி பிடிக்கப்பட்டது.கறுப்புக் கொடி காட்டுவதற்கான இரண்டாவது கர்ணிம்