பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நா. பார்த்தசாரதி

வரை அனுப்ப முடிகிறாற் போல ஒரு வேலையில் இருக்க நேர்ந்ததைத் தம் அதிர்ஷ்டமாக எண்ணினார் சர்மா. அவருடைய வயதுக்கும், அறிவுக்கும், அநுபவத்துக்கும் சினிமா உலக நடைமுறைகளின் விடலைத்தனமான ஆட் களும் பழக்கவழக்கங்களும் ஒத்து வரவில்லை என்றாலும் அவரை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த-அவருக்கு நன்ாகப் புரிந்த திருமலையோடு சேர்ந்து வேலை செய் வதில் சிரமம் எதுவும் நேரவில்லை. -

திருமலை தாறுமாறாகவும், எழுத்துப் பிழையோடும் எழுதிப் போடுகிற ஸ்கிரிப்டுகளைத் திருத்திச் சரியாக எழுதி வைப்பது ஒன்றுதான் அவரது வேலையாயிருந்தது. பள்ளி நாட்களில் பையன்களின் காம்போசிஷன் நோட் டைத் திருத்துகிற மாதிரி இப்போது திருமலையின்வசனங் களில் எழுத்துப் பிழைகளையும், ஒலிப்பிழைகளையும் திருத்திப் போடுகிற வேலையைச் செய்தார் அவர். பேர் என்னவோ'ஸ்கிரிப்ட் அஸிஸ்டெண்ட் என்றுதான் கொடுத் திருந்தார்கள். வாழ்க்கைத் தேவைகளும், வறுமையும் அவரை அந்த வயதிலும் அப்படி உழைக்க வைத் திருந்தன.

எழிலிருப்பிலிருந்து சென்னைக்கும் புறப்படும்போது ஏற்பட்ட கசப்பான அநுபவங்களைத் திருமலை மெல்ல மெல்ல மறந்து விட்டான். புதிய புகழும் வசதிகளும் பழைய துன்பங்களைச் சுலபமாக மறந்து போகச் செய் திருந்தன. எப்போதாவது சண்பகத்தின் நினைவு வந்து போகும். அவள் தான் அடிபட்டு விழுந்து படுத்த படுக்கை யாகக் கிடந்த நாட்களில் நந்தவனத்தில் செய்த சிசுரு ஷைகள் நினைவு வரும். அந்தச் சண்பகமா இப்படிக் கடுமையான வார்த்தைகளை எல்லர்ம் பேசினாள் என்று கூடவே வியப்பும் ஏற்படும். 'ஆசை அறுபது நாள், ! மோகம் முப்பது நாள்' என்பது போல் விளையாடி விட்டுத் தான் அவளைத் திரும்பிப் பாராமல் காடு மேய ஆரம் பித்ததாலேயே அவள் விரக்தியடைந்து மாற நேர்ந்தது