பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

链 - நா. பார்த்தசாரதி

அணைகின்ற சுடர்-அவிகின்ற நெருப்பு-என்ற நினைப்பு அச்சானியமாகவும், பயமாகவும் இருக்கிறது. அப்படி எண்ணத் தொடங்கும் போதே நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிழிவது போலிருக்கிறது. இழப்பதை விட இழக்கப் போகிறோம் என்ற நினைப்பு மிகவும் பயங்கர மானது, கொடூரமானது, விட்டுவிட்டுக் கொலை செய்யக் கூடியது, அடைவனவும், இழப்பனவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையோ என்று கூடத் தோன்றுகிறது. அடைந்ததை எல்லாம் ஒவ்வொன்ற்ாக நினைத்தால் இழக்கப் போகிறோம் என்ற நினைப்பே அச்சுறுத்துவதாக இருந் தது. அவனுடைய கண்களில் மெல்லமெல்ல நீர் மல்கியது. இப்படி வேளைகளில் அழுவது கூட ஒரு 'சுகமான ஆறுத லாக-பாரத்தைக் குறைப்பதாக இருக்கிறது. ஒரு வேளை அழுகையில் துக்கம் கரைகிறாே என்னவோ?

நடுநாயகமாக மாட வீதியிலிருந்த அந்தத் தனியார் நர்லிங் ஹோமில் ஒவ்வோர் அதிகாலையிலும் எல்லாச் சொகுசு அறைகளிலும் ஏ. சி.யை நிறுத்திவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து வெளிக்காற்றைத் தாராள மாக அநுமதித்துச் சுத்தம் செய்த பின் மீண்டும் அரை மணி நேரத்துக்குப்பின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி மறுபடி ஏ. சி.யைப் போடுவது வழக்கம். -

அன்றும் அப்போது ஜன்னல்கள் திறந்திருந்தன. ஜன்னலுக்கு வெளியே அறைகளைத் துடைத்துச் சுத்தம் செய்யும் வேலைக்காரி வேறு யாரிடமோ சொல்லிக், சுொண்டிருந்தாள். v . . o. . : 'இன்னிக்கித் தேரோட்டம். தேர் கிளம்பியாச்சு. வெய்யிலைப் பார்க்காமே வடம் பிடிச்சாங்கன்னாப், பொழுது சாயறதுக்குள்ளாறத் தேர் நிலைக்கு வந்துடும். ’ மிகவும் மங்கலான நினைவுகளோடு கண்களை மூடிய படி படுக்கையில் படுத்திருந்த அவனுடைய செவிகளில் யாரோகிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல இச்சொற். கள் ஒலித்தன. . . . . . . - -