பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நா. பார்த்தசாரதி

கொட்டகைகளைத் தவிர மேலும் இரண்டு மூன்று புதிய சினிமாத் தியேட்டர்கள் உண்டாகியிருந்தன. நிறைய மரங்கள் வெட்டப்பட்டு அந்த இடங்களில் கட்டிடங்கள், அல்லது குடிசைகள் தோன்றியிருந்தன. ஒலி பெருக்கிக் கடைகள் நாலைந்து வந்திருந்தன. . . "

காரிலிருந்து கீழிறங்கி ம்காநாட்டு மேடைக்குப் போகிற வழியில் தேரடியில் சண்பகம் பூ விற்றுக் கொண் டிருப்பதைத் திருமலை தன் கண்களாலேயே பார்த்தான். முன்னும் பின்னுமாக மரியாதை பந்தாவுடன் அவனை மேடைக்கு அழைத்துச் சென்ற ஆட்கள் முன்னிலை யிலேயே அவனைக் கண்டவுடன் மூகத்தைத் திருப்பிக் கொண்டு காரித் துப்பினாள் அவள். அதை அவர்கள் கவனித்தார்களோ இல்லையோ அவன் கவனித்தான். தன் மேல் அவளுக்கு ஏற்பட்ட ஆத்திரம் இன்னும் தணிய வில்லை என்று தெரிந்தது. எப்படியாவது யாருக்கும் தெரி யாமல் நந்தவனத்துக்கோ, பள்ளிக்கூடத்துக்கோ தேடிச் சென்று தன் பையனைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது அவனுக்கு. தானிருக்கும் உயரம், தனது அந்தஸ்து, தனியே நினைத்த நேரத்துக்கு எங்கேயும் தன்னிச்சையாகக் கிளம்பி விட முடியாத நிலை எல்லா மாகச் சேர்ந்து அவனைத் தடுத்து விட்டன. சினிமாப் பிரகாசத்தால் ஊரில் அவனது கவர்ச்சி அதிகமாயிருந்தது. எல்லோரும் அவனை முன்னிலும் மிகுதியாகப் புகழ்ந் தார்கள். முகஸ்துதி செய்தார்கள். நமது இயக்கச் செம்மல், தந்தையின் தனயன் அண்ணனின் அருமைத் தம்பி திரு. அவர்கள் மேடையிலிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் திரு. அண்ணனின் பேச்சைக் கேட்க ஆவ லோடு காத்திருப்பதை நான் அறிவேன்'-என்றெல்லாம் பாராட்டுரைகள் மேடையில் அவன் காதில் விழுந்தன. அவன் கடைசியாகப் பேசுவதற்கு முன்பு பேசிய ஒவ்வொரு வரும் தங்கள் பேச்சில் கணிசமான பகுதி அவனைப்புகழ்ந் தனர். அண்ணன் தன் சக்தி வாய்ந்த வசனங்கள் மூலம்