பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் - 79

இன்னும் இரண்டு படம் எடுத்தால் ஆட்சியையே மாற்றிக் காட்டுவோம் - என்று கூட ஒருவர் பேசினார். திரு மலைக்கு உச்சி குளிர்ந்தது. அண்ணன் பிறந்த மண்ணில் நடக்கும் இந்த மாநாடு வரலாறு படைக்கப் போகிறதுஎன்று தொடங்கிக் கட்சி தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் ஒருவர். தே தீர்மானம் இயக்கத்தின் மாநில மாநாட்டிலும் கொண்டு வரப்படும் என்றும் அவரே கூறினார்.

அன்றைய மாநாட்டின் நிறைவாகத் திரு. பேசிய பேச்சை இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கூடியிருந்து கேட்டு வாக்கியத்துக்கு வசிக்கியம் கரகோஷம் செய்தனர். திருமலைக்கு ஆளுயர மாலைகளும், கைத்தறி శ్రీడ ... களும் மலையாகக் குவிந்தன. மாநாட்டில் அவன் தன்னு டைய பேச்சை முடித்தபோது இரவு பதினொன்றே கால் மணி. நெருக்கியடித்துக் கொண்டு பேச்சைக் கேட்டார்கள் ஒர் ஆள் கூட இறுதிவரை எழுந்திருக்கவில்லை. மாநாடும் பாராட்டும் கைதட்டலும், தந்த உற்சாகமான கர்வங்கள் சண்பகம் முகத்தைத் திருப்பிக் கொண்டு காரித்துப்பிய தைக் கூட மறக்கச் செய்து விட்டன. -

அதே கர்வத்தில் மிதந்தபடி கூட்ட்த்தை விலக்கி மெதுவாகக் காரைச் செலுத்திக் கொண்டு டி பி. வாசலில் வந்து இறங்கினால் அங்கே அவனது பெட்டி, படுக்கை முதலிய சாமான்கள் வராந்தாவில் எடுத்து அடுக்கப்பட்டி ருந்தன. வாட்ச்மேன், ஒடோடி வந்து, சார்! திடீர்னு நம்மூர் மினிஸ்டரே வந்துட்டாரு. வேற வழி இல்லே. உங்க சாமான்கள்ளாம் இதோ இருக்கு...நீங்க வேற இடம் பார்த்துக்க வேண்டியதுதான்...' என்றான். வந்து தங்கியிருக்கும் மந்திரி உள்பட்டணம் சின்னக் கிருஷ்ண ராஜ உடையார்தான் என்பதும் தெரிந்து விட்டது. -

நடுத்தெருவில் யாரோ பகிரங்கமாகத் தன்னை மூக்கை அறுத்து விட்டதுபோல ஆக்ரோஷமாயிருந்தது .திருமலைக்கு. . . . - -