பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 85

ஜமீன் குடும்பத்துக்கும் கடினமான விரோதம் இருப்ப தாகப் பாவிப்பதையே அவன் விரும்பினான். அந்தப் பாவனை அவனுக்கு வேண்டியிருந்தது. அந்தப் பாவனை யிலிருந்து சிறிது நெகிழ்ந்தோ இளகியோ, தணிந்தோ, போவதுகூடப் பாவம் என்று அவன் எண்ணினான். விரோதத்தில்தான் அவன் வளர்ந்தான். விரோதத்தில் தான் அவனது அரசியல் சார்பு தீர்மானமாயிற்று. விரோ தத்தில்தான் அவன் பேச்சு, எழுத்து, வளர்ச்சி, புகழ் எல்லாமே இருந்தன. அந்த விரோதத்தை இன்னும் விட்டு விட அவன் தயாராயில்லை. -

விரைவில் அடுத்து வந்த பொதுத்தேர்தலில் சின்ன உடையாரை எதிர்த்து அவன் சட்டசபைக்குப் போட்டியிட வேண்டுமென்று கட்சி முடிவு செய்தது. முதல் முதலாகச் சட்டமன்றத் தேர்தலுக்கு நின்ற கட்சியின் முக்கியப் புள்ளி களில் அவனும் ஒருவனாயிருந்தான். பரம்பரையும் செல் வாக்கும் உள்ள ஒரு பெரும் புள்ளியை எதிர்த்து அவன் வெல்ல முடியுமா என்று பயமும் சந்தேகமும் பொது மக்களில் பலருக்கு இருந்தன. தேர்தலில் நிற்கும்போதே சின்ன உடையார் மந்திரியாயிருந்தார். பதவியின் உயரம் வேறு அவருக்கு இசைவாயிருந்தது. திருமலை மட்டும் பயப்படாமல் துணிந்து நின்றான். சின்ன உடையாரைப் :பழி வாங்கும் வெறிநெருப்பு அவனுள் எப்போதும் போல் அணையாமல் கனன்று ஜ்வலித்துக் கொண்டிருந்தது.

13

தேர்தல் வேலைகளில் திருமலை முழுமூச்சாக இறங் கினான். சின்னக் கிருஷ்ணராஜனைப் பற்றி அரசியல் ரீதி யாக மட்டுமே எதிர்க்காமல் உள்பட்டணத்தோடு சம்பந் தப்படுத்திப் பழைய பூர்வோத்தரங்களை எல்லாம் சொல் லிக் கொச்சையாக எதிர்த்தான் திருமலை. அதற்கு நேர் மாறாகச் சின்னக் கிருஷ்ணன் தன்னை எதிர்க்கும் தனி

மூ-6 - - * . . . .