பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கா. பார்த்தசாரதி.

நபர்கள், பெயர்களைக் குறிப்பிடாமல் தன்னால் மக்க. ளுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும் என்று. மட்டும் பிரச்சாரம் செய்தார். சின்னக் கிருஷ்ணனின் இந்தப் பண்பு பலரால் பாராட்டப்பட்டது. பெரும்பாலோ ரால் வரவேற்கப்பட்டது. திருமலை சண்பகத்தைத் தள்ளி வைத்திருப்பது சொந்த மகனைப் படிக்க வைக்கக் கூடப் பண உதவி செய்யாமல் தன் சுகத்துக்காகப் பல ப்ெண் களுடன் தொடர்பு கொண்டிருப்பது ஆகிய விவகாரங். களைப் பற்றி எதிர்த் தரப்பினர் பதிலுக்குப் பேச ஆரம்பிப் பார்க்ள்ே என்று யாரும் யோசிக்கவே இல்லை. ஒரே ஒருவர் யோசித்து அதுபற்றி அவனை எச்சரித்தார். * தம்பீ! உங்க பூர்வோத்தரமும் மத்ததும் இந்த ஊர்லே எல்லோருக்கும் நல்லாத் தெரியும். அதனாலே கோவில் குளம் பக்தி இதுகளிலே தீவிர நம்பிக்கையுள்ள மேல் தட்டு மக்களில் யாருடைய ஒட்டும் உங்களுக்குக் கிடைக் காது. அவர்களுக்கு உங்க மேலே நம்பிக்கை வர்ற மாதிரி நீங்க உடனே எதினாச்சும் பண்ணியாகணும்.' -

எதினாச்சும் பண்ணியாகணும்னு நான் திடீர்னு அனு: மாருக்கு வடைமாலை போடவோ, பெருமாளுக்குத் திருக் கல்யாண உற்சவம் நடத்தி வைக்கவோ முடியாது. அதுக்கு ஒருநாளும் என் மனச்சாட்சி சம்மதிக்காது. வேணும்னா ஒரு காரியம் பண்ணலாம்! நம்ம வேணு கோபால சர்மா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலே உள்ளூரிலே தமிழாசிரியரா இருந்து ஓய்வுபெற்றவர். முக்கால்வாசி வாக்காளர்கள் அவருடைய மாணவர்களாக இருந்திருப்பார்கள். அவர் பக்தி, கோவில், குளம், சம்பிர தாயம் பழைய பழக்க வழக்கங்கள் எல்லாத்திலேயும் நம்பிக்கை உள்ளவர்தான். அவருக்கு ஒரு மணிவிழா நடத்தி தடபுடல் பண்ணி அதன் மூலமாக மேல்தட்டு ஒட்டுக்களை நம்ம சைடிலே திருப்ப முடியுமான்னு: பார்க்கணும்."

'மணிவிழான்னு போட முடியாது. அவருக்கு ஏற். கெனவே அறுபது முடிஞ்சு போச்சுங்க...' -