பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நா. பார்த்தசாரதி

உள்ளுர் மக்களில் பெரும்பாலோர் அநுமார்மேல் அசையாத நம்பிக்கையும் பயபக்தியும் உள்ளவர்கள், பெரும்பாலான பாமர மக்களிடம் அந்த எழிலிருப்புத் தேரடி அநுமார் படத்தை நீட்டி வலது கையில் சத்தியம் வாங்கிக் கிருஷ்ணராஜனுக்கே ஒட்டுப் போடுமாறு காதும் காதும் வைத்தாற்போல் ஏற்பாடு செய்து கொண்டிருந் திார்கள் ஜமீன்தாருக்காக வேலை செய்தவர்கள். தேர்தல் நாள் நெருங்க நெருங்கப் பரபரப்பு அதிகமாகிக் கொண்டி ருந்தது. பரம்பரைப் பெரிய மனிதனை மதிக்கவேண்டும் என்ற தழும்பேறிய மனப்பான்மை ஊரில் அதிகமாக இருந்தது. உள்பட்டணத்து அரச குடும்பத்தைக் கேரக்டர் அஸாஸினேஷன் செய்வது போல் திருமலையும், அவன் தரப்பினரும் பேசிய பேச்சுக்கள் சுவரில் எழுதிய கன்னா பின்னா எழுத்துக்கள் எல்லாமே நேர் எதிரான பலன் களை அளித்தன. அந்த எழுத்துக்களைப் பார்த்தபின், பேச்சுக்களைக் கேட்ட பின் மக்களுக்கு உள்பட்டண அரச குடும்பத்தினர் மேல் மரியாதை அதிகமாயிற்றே ஒழியக் குறையவில்லை. எழிலிருப்பு போன்ற பழமையான ஜமீன் நகரங்களில் 'நெகடிவ் அப்ரோச்' எடுபடவில்லை. சினிமாவில் சம்பாதித்த பணத்தைத் தண்ணிராய் ஒட விட்டுச் செலவழித்தும், முழுமூச்சாக எதிர்ப்புப் பிரச்சாரத் தில் இறங்கியும் ஜெயித்து விடலாம் என்று திருமலையால் முழுமையாக நம்ப முடியவில்லை.

தேர்தலுக்குப் பத்துப் பதினைந்து நாள் இருக்கும். போது, இருந்தும் பயனில்லை செத்தும் பயனில்லை என் பது போல் சண்பகம் அவனுக்கு மகத்தான கெட்ட பெயரை உண்டாக்கி விட்டுப் போய்ச் சேர்ந்தாள். நந்த வனத்து மனோரஞ்சிதப் புதரடியில் பாம்பு கடித்து இறந்து போன சண்பகத்துக்குச் சிறுவன் ராஜா. தலையை மொட்டை அடித்துக் கொண்டு கொள்ளிச் சட்டி ஏந்தி அந்திமக்கிரியைகள் செய்தான்.திருமலைக்கு யாரும் வந்து தகவலே சொல்லவில்லை. தன்னுடைய தேர்தல் அலு