பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 8?

வலக மாடியிலிருந்து ஒரு பாடையைப் பின்பற்றி யாரோ ஒரு சில உறவினர்களுடன் முன்னே ஒரு சிறுவன் மொட் டையடித்துக் கொண்டு சுடாமல் இருக்க உறி போல் கட்டிக் கொள்ளிச் சட்டியைப் பிடித்துப் போவதையும் கூடத் திருமலையே பார்த்தர்ன் .

போவது தன் மூத்த மனைவி சண்பகத்தின் பின்னம் தானென்பதையோ, கொள்ளி எந்திச் செல்வது தன் மகன் தான் என்பதையோ அவனால் அனுமானிக்க முடிய வில்லை. மாலையில் தான் விவரம் அவனுக்குத் தெரிந் தது. நந்தவனத்துக்கு ஓடினான். சண்பகத்தின் தம்பியோ மகன் ராஜாவோ அவனிடம் முகம்கொடுத்துப் பேசவே இல்ல்ை. -

'எலெக்ஷ னுக்குத்தானே வந்திருக்கீங்க. எலெக்ஷன் வேலையைப் போய்க் க்வனியுங்க'-என்று வேறு எகத் தாளமாகப் பேசி விட்டான் சண்பகத்தின் தம்பி. வைக் கோற்போரில் தீப்பற்றுவது போல், உள்ளூரிலேயே இருந்துக்கிட்டுச் சொந்த சம்சாரத்தோட சாவுக்குக் கூட எட்டிப் பார்க்காத கல்நெஞ்சுக்காரன் ஐயா அந்தத் திருமலை- என்று இச் செய்தி எங்கும் நெருப்பாகப் பரவிவிட்டது, அவன் கல்நெஞ்சுக்காரன், ஈவு இரக்க மில்லாத படுபாதகன் என்பது போல் அவனுக்கு எதிராகப் பரவியவற்றை அந்தச் சமயத்தில் மேடை போட்டு மறுத் துப்பேசவும் முடியவில்லை. உண்மையிலேயே அவன் சண்பகத்தின் சாவுக்குப் போக முடியாமல். ஊரறியத் தன் அநுதாபத்தைக் காட்ட முடியாமல் விதி சதி செய்து விட்டது. விதியில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது என் றாலும் அப்போது நம்பாமலிருக்கவும் முடியவில்லை. இம்மாதிரி அபக்கியாதிகள் எழிலிருப்பைப் போன்ற ஊர் களில் ஏற்படும்போது அவற்றைச் சுலபத்தில் பிரசாரம் செய்து மறுத்தோ, மேடை போட்டுப் பேசியோ மாற்றி விட முடியாதென்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது. இவ்வளவுக்கும் உள்பட்டணத்தார் தரப்பில் யாரும்