பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் - 9$

திரும்பி வந்து திருமலையிடம் விவரங்களைச் சொன்னார். சண்பகத்தின் தம்பி உட்பட யாரும் தன்னை ஒரு குடும்பப் பாங்கான மனிதனாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது திருமலைக்குப் புரிந்தது. தேர்தல் தோல்வியைத் தவிர இது இன்னொரு தோல்வியாக அமைந்தது அவனுக்கு. பையனை அவன் மாமனிடம் இருந்து பிரித்து அழைத்துச் சொல்லுவதற்குக் கோர்ட் ச ட் ட ம் ஆகியவற்றின் துணையை நாட விரும்பவில்லை. அவன். தன்னிடம் வளர் வதைவிட நந்தவனத்துக் குடிசையில் அவன் இன்னும் யோக்கியனாகத்தான் வளர முடியும் என்ற நம்பிக்கை உள்ளுறத் திருமலைக்கும் இருந்தது.

தேர்தலில் நிறையப் பணம் செலவாகி விட்டது. மறுபடி சென்னை திரும்பியதும் மற்றவர்கள் படங்களுக் குக் கதை வசனம், பாடல் எழுதுவதைத் தவிர வட்டிக்குக் கடன் வாங்கித் தானே ஒரு படம் எடுத்து விற்றால் கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தோன்றியது. தொழிலில் அவனுக்கு இருந்த செல்வாக்கால் யாரும்: கடன் கொடுக்கத் தயாராயிருந்தார்கள். பணத்தைக் கடன் வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினான். அதே சமயம் திராவிட முழக்கம் அதிரடி பகுதியில் தன் தோல்வியைப் பற்றியும், எழிலிருப்பு ஜமீன்தார் பணத்தைத் தண்ணிராக வாரி இறைத்து வென்று விட்டார் என்றும், தொடர்ந்து எழுதி வந்தான். உண்மையில் ஜமீன்தார் தன்னை விடக் குறைவான தொகையைச் செலவழித்துத்தான் வெற்றி: பெற்றார் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. என்றா லும் அரசியலில் நிஜத்தைச் சொல்லிப் பயனில்லை என்று. அவன் ஒரு நம்பிக்கையோடு தொடர்ந்து பொய்களைச் சொல்லி வந்தான். தன் எதிரி உண்மையிலேயே நல்ல வனாயிருந்தாலும்கூட அவன் நல்லவனில்லை என்று. மக்களுக்குச் சித்தரித்துக் காட்டுவதில் எவன் முழுமையாக. வெற்றி பெறுகிறானோ அவன்தான் முழுமையான அரசியல்வாதி என்று நம்பினான் திருமலை. மக்களை