பக்கம்:மூவரை வென்றான்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

117

களைக் கோணற்கொண்டையாக அள்ளி முடிந்திருக்கும் தோற்றத்தில் கொஞ்சம் அழகும் இருந்தது. வல்லவட்டுச் சல்லடமும் பிச்சுவாச் சொருகிய இடையும் அதைச் சுற்றிச் கிடந்த தடிமனான பெல்ட்டும் அந்தச் சிறு புகைப்படத்தைக் காண்பவர் நடுங்கும்படி இருந்தன. காதில் வட்டவடிவமான ஒலைத் தோடு ஒன்று அணிந்திருந்தான். தோற்றம் முற்றிலும் கூடி ஒரு பயங்கரமான வீரனின் முன்புறத் தோற்றத்திற்கு அடையாளமிட்டன.

இந்தப்படத்தைக் கழுவி நெகடிவ் செய்வதற்குப் பக் கத்து ஊருக்கு அனுப்பிவைத்திருந்த சுதர்சனராவ் மறுநாள் தபாலில் அதைத் திரும்பப் பெற்றார். மாலை வீடு திரும்பும் போது விரைவில் அதை மேலதிகாரிகட்கு அனுப்பவேண்டு மென்று எண்ணிக்கொண்டு டிராயரில் வைத்து நன்றாகப் பூட்டிவிட்டுப் புறப்பட்டார். நன்றாக இன்னும் நினைவிருக் கிறது; டிராயரை மறக்காமல் பூட்டியதும், படத்தை உள்ளே வைத்ததும் நிச்சயந்தான்.

ஆனால், மறுநாள் காலை ஆபீசுக்கு வந்தவர் திடுக்கிடும் படியாக ஒன்று நடந்தது. டிராயர் பூட்டியது பூட்டியபடியே இருந்தது. சுதர்சனராவ் மேலே படத்தை அனுப்புவதற்காக அதைத் திறந்தார். திறந்ததுதான் தாமதம் புஸ்ஸ் என்று. சீறிக்கொண்டு வெளியே வந்தது ஒருபாக நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று!!! ஐயோ! என்று அலறிக்கொண்டே ஒடி விட்டார் சுதர்சனம். கடைசியி ல் ஸ்டேஷனிலிருந்த போலீஸார் ஒருவழியாக அதை அடித்துக்கொன்றுவிட்டனர். பாம்பை அடித்த பிறகும் டிராயரை நெருங்க அஞ்சினார் சுதர்சனம். கிட்ட நெருங்கும்போது அவருடைய உடல் வெல வெலத்து நடுங்கியது. உள்ளே டிராயரில் முதல் நாள் கழுவி வைத்த படம் இல்லை. ஒரு சிறு ஒலை நறுக்கு, படம் இருந்த அதே இடத்தில் இருந்தது.

‘நச்சுப் பாம்பை அது உன்னைப்பார்க்காத நிலையில் நீ பார்த்துப் படம் பிடித்துவிட்டாய். இப்போது அந்த