பக்கம்:மூவரை வென்றான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மூவரை வென்றான்

ருமே போய் மதிற்பக்கம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம்! அதோடு நீயும் உன் மாமனும் தீர்த்துக்கட்டிய ஆட்களை பாழுங்கிணற்றிலிருந்து எடுத்துக் கமுக்கமாக அடக்கம் செய்ய வேண்டியது முக்கியம். இந்தக் காவற்காரர்களையும் நம்மோடு அழைத்துப்போய் அந்தக் காரியத்தையெல்லாம் நிறைவேற்றிவிட்லாம்..” என்று இவ்வாறு கூறிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், மீண்டும் தொடர்ந்து மாமனை நோக்கிக் கூறலானார்.

“பெரியவரே! என்னால் உங்கள் மருமகனுக்கு ஏற்பட்ட சிரமம் மிகத் துன்புறுத்துகின்றது என் மனத்தை! ஆனால், ஒன்று மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கெல்லாம் சரியானபடி கைம்மாறும் நன்றியும் செய்யாமல் விட்டுவிட மாட்டேன். உங்கள் மருமகன் என் பழைய நண்பர் வீர பாண்டியத் தேவரின் புதல்வன் என்ற நினைவே என்னை இன்று பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது.” பண்ணைத் தேவர் கூறிவிட்டுத் தன் காவற்காரர்களையும் கூப்பிட்டுக் கொண்டு, வெளியே செல்வதற்குத் தயாராக எழுந்து நின்றார்.

மாமனும் வெள்ளையத் தேவனும்கூட அவருடன் புறப்படுவதற்குத் தயாரானார்கள். உள்ளே அறையின் கதவோரத்தில் பொன்னியின் மருண்ட விழிகள், த்ன்னை நோக்கு வதை வெள்ளையத்தேவன் கண்டான். இதயத்தின் ஆழத்தைத் துழாவும் அந்த அழகான பார்வை காதில் கத்தி துளைத் திருந்த வலியையும் மறக்கச் செய்து, அவனைக் கவர்ந்தது.

பண்ணைத் தேவரின் வேலையாட்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி முன் செல்ல, மூவரும் மதிற் கதவைத் திறந்துகொண்டு சுவரோரமாகப் பாழுங்கிணறும் அடர்ந்த புதருமாக இருந்த இடத்தை அடைந்தனர்.

கிணற்றருகிலே புதருக்குள் தீப்பந்தத்தை இருள் அகலும் படியாகக் காட்டினார்கள் வேலையாட்கள். வெள்ளையத் தேவன் பச்சிலையை மூக்கிலடைத்துத் தள்ளியஆள் அங்கேயே அவன் தள்ளியபடி விறைத்துக் கிடந்தான். தீவட்டியைத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/78&oldid=508108" இலிருந்து மீள்விக்கப்பட்டது