பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 219 ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேன் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்." என்பது முதலாகச் சிலப்பதிகாரத்தில் வரும் வரிப்பாடல்கள் மேற்குறித்த வண்ணம் வெண்டளை தழுவி நடக்கும் கொச்சகக் கலிப்பாவுக்குரிய இலக்கியமாகத் திகழ்தல் காணலாம். இப்பாடல் களின் ஈற்றுச்சீர் இரண்டினை நீக்கிவிட்டு அவ் விடத்து ஓரசைச் சீர் ஒன்றினைப் பெய்து வாசித்தால் இக் கொச்சகக் கலிப்பாக்கள் வெண்பாவின் வடிவத்தைப் பெறுதல் காணலாம், சூலப் படையானைச் சூழாக வீழருவிக் கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப் பாலொத்த மென்மொழியாள பங்கனைப் பாங்காய ஆலத்தின் கீழானை (யாம்) என கீழ்க் குறித்த பாடலில் வெண்பாவின் உருவம் புலனாதல் காணலாம். 20-ஆம் பதிகம், காண்ட லேகருத் தாய்நி னைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி பூண்டுகொண் டொழிந்தேன் - புறம் போயினா லறையோ (4.20:1) தான தானன தான தானன தான தானன தானன தன தானனா தனனா - தன தானனா தனனா என முன்னிரடிகளைப் போன்று பன்னீரடிகளும் வருவன. இரண்டாம் திருமுறையில் 49 முதல் 53 வரையுள்ள சீகாமரப் பதிகங்களின் யாப்பினை ஒத்தமைந்தது இத்திருப்பதிகமாகும். 34. சிலப். மதுரை வேட்டுவவரி - வள்ளிக் கூத்து - முன்னிலைப் பரவல்