பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மூவர் தேவாரம் - புதிய பார்வை தான 'தனன. ஆதலும் தானா தனனா ஆதலும் தன தானா 'தானதனா ஆதலும் அமையும். இத்திருமுறையில் ஏழாந் திருப் பதிகமாகிய இது காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங் காட்டு மூத்ததிருப்பதிகங்கள் இரண்டனுள் 'எட்டிளவம் என்னும் இந்தளப் பதிக யாப்பினை ஒத்தமைந்ததாகும். யாப்பு - 6 இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு (7.8:1) கருவிளம் புளிமா தேமா தேமாங்காய் புளிமா தேமா என வருவது எட்டாந் திருப்பதிகத்தின் கட்டளையடியாகும். இது திருநாவுக்கரசர் அருளிய திருநேரிசை யாப்பில் அமைந்தமை காணலாம். இதன்கண் தேமாங்காய் என்னும் வாய்பாடமைந்த 'இன்பத்தோ என்ற சீர் கூவிளம்' என்ற சீரளவாய் நின்றமை செவி கருவியாக உணரத்தக்கதாகும். யாப்பு - 7 தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மான்தி டந்திகழ் ஐங்கணையக் (7.10:1) தான தனாதன தானன தானன தானன தானன தானதனா என வருவது பத்தாந் திருப்பதிகத்தின் அடியமைப்பாகும். இதனை, தேனெய்புரிந் - தழல் - செஞ்செடை யெம்பெரு மானதிடந் - திகழ் - ஐங்கணையக தானதனா - தன - தானன தானன தானதனா - தன - தானதனா எனப் பிரித்துப் பாடுதலும் பொருந்தும்.