பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 9 விரும்புவார் சிலர் இவை மோட்ச நூல்கள் என்று கூறித் தத்தம் திருமாளிகையில் இருந்த ஒலைச் சுவடிகளைச் செல்லுக்கு இரை யாக்கலாயினர். மேலும் சிலர் இவை வடமொழி வேதங்களின் புகழுக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கருதி அவற்றைத் தாமிரபரணி ஆற்றில் தள்ளிக் கடலுக்கு அனுப்பி விட்டனர். இதனால் நாலாயிரம் வழக்காற்றில் இல்லாத நிலை. ஆழ்வார்கள் வீடுபேறு பெற்று நெடுங்காலம் ஆன பிறகு வீர நாராயண புரத்தில் (தில்லைக் கருகிலுள்ள காட்டு மன்னார் கோயில்) மன்னனாருக்கு நித்திய கைங்கரியம் செய்து கொண்டும் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டும் வாழ்ந்து வந்தார். நாதமுனிகள் என்னும் ஒரு வைணவப் பெரியார். இங்ங்ணம் இருக்கும் காலத்தில் ஒரு நாள் மேல்நாட்டிலிருந்து சில சிரீவைணவர்கள் எழுந்தருளி மன்னனாரைச் சேவித்து அவர் சந்நிதியில் 'ஆராவமுதே' (திருவாய் 5.8) என்கின்ற திருவாய்மொழியை அது சந்தானம் செய்தனர். இதனை நாதமுனிகள் செவிமடுக்க நேர்ந்தது. இதன் பல சுருதிப் பாசுரத்தில் 'குருகூர்ச்சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்' (5.8:11) என்ற தொடரைக் காட்டி ஆயிரம்' பாசுரங்களையும் தேவரீர் அறிவீரோ?' என்று வினவ, அவர்கள் எங்கட்கு இவ்வளவு தான் தெரியும். இதற்கு மேல் தெரிந்தவர்கள் வேறொருவரும் இலர்' என்று தெரிவித்தனர். நாதமுனிகள் எப்படியாவது இப்பிரபந்தத்தை வெளி கொணர வேண்டும் என்று திருவுள்ளங்கொண்டு கும்பகோணம் சென்று சார்ங்கபாணிப் பெருமாளைச் சேவித்து அவர் பால் விடை பெற்றுக் கொண்டு நம்மாழ்வார் திருவவதாரம் செய்த திருக்குருகூருக்கு (இப்பொழுது ஆழ்வார் திருநகரி என்று 3 இது கும்பகோணத்தில் எழுந்தருளியிருக்கும் சார்ங்கப்பாணிப் பெருமாள் மீது மங்களா சாசனம் செய்யப் பெற்ற திருவாய் மொழி.