பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 125 அதாவது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவதான பந்தடித்தாடும் தளம் ஆகிய நான்கினையும் மிதித்துவிட்டுத்தான் ஒட வேண்டும். 2. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு தள ஓட்டக்காரர் முன்பிருந்த தளத்திற்குத் திரும்பி வரவேண்டும் என்றால், முன்போலவே, அந்தந்த தளத்தினை மிதித்தவாறுதான் செல்ல வேண்டும் (Reverse order). குறிப்பு: அவர்கள் அவ்வாறு திரும்பிச் செல்லும் போது, பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். தள ஓட்டக்காரர் தொடப்பட்டால் ஆட்டமிழப்பார் என்ற நிபந்தனைக்குள்ளாகியே ஒடிட வேண்டும். 3. ஒரு தள ஒட்டக்காரர் தொடப்பட்டு ஆட்ட மிழக்காதவாறு ஒரு தளத்தைத் தொட்டுவிட்டு அந்தத் தளத்தில் நிற்கும் உரிமை பெற்றுவிட்டாரென்றால், அடுத்த தளத்திற்குச் சென்று அதைத் தொடும் வரை அல்லது தன்னைத் தொடர்ந்து பின்வரும் தன் குழு தள ஒட்டக்காரருக்குத் தன் தளத்தைக் கட்டாயம் விட்டுக் கொடுத்தாக வேண்டும் என்ற தருணம் வரும் வரை, அந்தத் தளத்திலேயே இருந்தாடலாம். 4. தளத்திற்கிடையே ஒடுகின்ற தள ஒட்டக்காரர், தளத்தின் உரிய இடத்திலிருந்து அதனைத் தள்ளி அப்புறப்படுத்திவிடுகிற பொழுது, அவரும் அல்லது அவரைத் தொடர்ந்து ஓடி வருகின்ற ஒட்டக்காரர்களும் தளம் நோக்கியே ஒட வேண்டியிருப்பதால், அவர்கள் காரணமின்றியே, நிலைமாறிப்போக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றார்கள்.