பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 థ్రి மென் பந்தாட்டம் குறிப்பு: பந்து நிலைப்பந்தாகிறது. நடுவரானவர் அதனை 'பந்து' என்றோ 'அடி (Strike) என்றோ அறிவிக்கலாம். 3. தள ஓட்டக்காரர் தொடப்பட்டால் ஆட்டமிழப்பார் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்களின்படி, ஒரு பந்தடி ஆட்டக்காரர் தளம் நோக்கி முன்னேறும் பொழுது தொடப்பட்டால் ஆட்டமிழப்பார். 1. பந்தெறிவதற்காக பந்தெறிபவர் எறிய, அந்தப் பந்தானது அவரது கையை விட்டு நீங்குகிற பொழுது. 2. வீண் எறி (Over Throw) மூலமாக எறியப்பட்ட பந்தானது, ஆடுகள உட்பகுதியில் அல்லது எல்லைக்கு வெளியே போகும்பொழுது தடுக்கப்படாமல் இருந்தால். 3. ஆடுகள சரியான பரப்பில் அடிபட்ட பந்தானது போகும் பொழுது அது தடுக்கப்படாமல் இருந்தால். 4. தளம் தொடாமல் ஓடும் ஒட்டக்காரர் ஆட்டமிழத்தல் 1. பந்து ஆட்டத்தில் இருக்கும்பொழுது, அவருக்கு உரியதான தளத்தினைத் தொடத் தவறிவிட்டு, அடுத்த தளத்திற்கு செல்ல முயற்சித்தல். முதலில் அடித்தாடிய பந்தடி ஆட்டக்காரர் ஓடி வருகிறபொழுது தள ஒட்டக்காரர் அல்லது வேறு ஒரு தள ஓட்டக்காரர் முதல் தளத்தில் இருந்து கட்டாயமாக ஒடியே ஆக வேண்டும். ஏனென்றால், பந்தடித்தாடி மறுதளம் நோக்கி விட்டு ஓடி வருகிறவருக்கு முதல் தளத்தில் இடம் தந்தே ஆக வேண்டும். அவ்வாறு தளத்தினை விட்டுத் தர முடியாத தள ஒட்டக்காரர், கட்டாயமாக ஆட்டம் இழந்துவிடுவார் (Force-Out).