பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் சங்கிலிப்போல் பரம்பரைகள் பிணைந்து நீண்டு : சரித்திரத்தில் புகழ்வெளிச்சம் பதியச் செய்த மங்களமாம் உதயங்கள் எத்தனையோ? 'மனைவிளக்கே ! உயிர்த்தாயே எனது தொட்டில் சங்கீதம் பாடியதும் உன்ம டியில்தான் ! தலைக்குயர்ந்த என்மகனும் அவனுக்குரிய சிங்கத்தின் : இளமொக்கின் தொட்டில் தளையும் சிந்துதிர்த்தே ஆட்டியதும் நீயே அன்றோ? 'உன்மேனிக் காயங்கள் பகைவன் வைத்த உலராத ரணக்குழிகள் ; உதைத்த உதைகள் என்மேனிக் காயம், ரணம், உதைகள் அன்றோ ! 'இட்டுவக்கும் கருமமதைத் தவித்துப் பாழும் வன்முறையில் எடுத்துவக்கும் பழக்கம் இல்லா வயணமுறு பண்பாடா குலைய வேண்டும்? தன்போக்கில் வாழ்வெடுத்த அன்பு - ஆசைத் தாயகமே ஏன் வீழ்ந்தாய்? ஏனோ தாழ்ந்தாய்?" இவ்வாறாய்ச் சிந்தனைகள் நெய்து நொந்தே ஏறுகின்ற வெயிலிலும் நடுங்கி நின்றாள் ! தெவ்வர்படை கொட்டுகின்ற வெற்றி முரசம் தீச்சரம்போல் அவள்செவிக்குள் நுழைய லாச்சு ! எவ்வளவோ கண்ணிரைக் கண்ட வள்தான் ! எத்தனையோ தோல்விகளைச் சுமந்த வள்தான் ! அவ்வளவும் து சாக, நாடு வீழ்ந்த ஆபத்தே பெரிதாகக் கருத லானாள் ! 13