பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் சுதந்திரத்தைப் பலிகொடுக்கத் திட்டம் போட்ட துரோகிகளின் கும்பலுக்குள் மூத்த ஆளே பதர்புத்தி சோதாப்பயல் புலிநெஞ் சன்தான்! பத்துமாதம் சுமந்திளைத்துப் பெற்றெடுத்து இதம்பதமாய் வளர்த்தவளின் செவிக ளுக்கே எள்ளளவும் தன் செயல்கள் எட்டா வாறு சதிக்கூத்தைத் தந்திரமாய் ஆடிவந்தான் ! சாணத்தைச் சந்தனமாய் தாய்ம தித்தாள் ! தன்வசத் திட்டமதன் கடுமை குறைக்கத் தலைநகரை விட்டு வெளி யேறுவோர்கள் அன்பனுக்கோ ஆசைக்கோ உரிய தான கள் ! ஆவிதனை ஒத்ததொரு உடமைமட்டும் இன்னலெதும் அரசுக்கே தந்தி டாமல் இயன்றவரை தம் முதுகில் சுமந்து செல்ல நன்மையாய் ஒர்சலுகை கொடுத்திருந்தான் ! நஞ்சிருக்கும் இடமெல்லாம் போர்வை உண்டே அடுத்தடுத்துப் பலபேர்கள் அண்டா குண்டா; ஆடுகன்று பெட்டிசட்டி என்பவற்றை இடுப்பொடிய முதுகேற்றிச் சுமந்து சென்றார் இப்படியே தலைநகரே இளைக்க லாச்சு ! தடுத்திடவோ, மறுத்திடவோ இயன்றி டாமல் தள்ளாத வயதினரைப் பிரியா விடைகள் கொடுத்தனுப்பிச் சுற்றத்தார் தேம்ப லானார் கொடுமை இது என்றலறிப் புலம்ப லானார் !