பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 மெழுகுச் சிறகுகள் 43 வெறும்மனிதன் அலெக்ஸாண் டருக்கு வேடந்தான் அரசன் பதவி! எறும்புக்கும் தீமை செய்யா இதயமுளான் எவனோ அவன்தான் பெருங்கடவுள்! அருளின் தேவன்! பீடுபெற அவனை யேநான் இருகரங்கள் கூப்பிக் கூப்பி என்றென்றும் தொழுவேன்! துதிப்பேன்! அப்பனே தண்டா மள்தான் அலெக்ஸாண்டர் பரிசை எல்லாம் குப்பையாய்க் கருது கின்றான் ! கூட்டிவா மன்னனை என்பால் : உப்பிட்டப் பாலாய் முறிந்த அலெக்ஸாண்டர் உளத்தை மாற்றி இப்புவியே வியக்கும் வண்ணம் யான்பரிசு வழங்கு கின்றேன் !