பக்கம்:மேகமண்டலம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய உலகத்தில் புகுந்த பிறகு இமய மலையையும் கங்கையையும் பார்த்துப் பார்த்து வியந்தேன். காண்டா மிருகத்தையும் திமிங்கிலத்தையும் கண்டு பயந்தேன். தேளுறும் பாலாறுமாகத் தித்தித்த கவிஞர் பாட்டில் மூழ் கினேன். அவர்களும் பாடினர்கள்; நானும் பாடுவதாவது ! - இந்த நினைவு சற்றே பிள்ளைப்பருவக் கற்பனையோட்டத்துக்கு காண் பூட்டியது.

ஆ ன லும் அவ்வப்போது பாடினேன். 'ஜோதி” என்ற பெயருடன் பத்திரிகைகளில் கவிகளை வெளியிட்டேன்.

அவற்றில் சில இந்தத் தொகுதியில் இருக் கின்றன. -

இவற்றைப்பற்றி நான் சொல்ல எவ்வளவோ உண்டு; ஒன்றும் சொல்வதற்கு இல்லையென் றும் தோன்றுகிறது. சொல்லலாம்; சொல் வதற்கு இது இடமும் அன்று, காலமும் அன்று என்று அமைகிறேன்.

இனியும் சில தொகுதிகளை வெளியிடலாம் என்ற ஆர்வம் இப்போது உந்துகிறது, பார்க்கலாம். -

கல்யாண 蠶}

11—11—55 கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/7&oldid=620467" இலிருந்து மீள்விக்கப்பட்டது