பக்கம்:மேனகா 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

மேனகா

பொக்கைப் பல்லும், வெள்ளிச் செம்பும், தொள்ளைக்காதும் பளபளவென மின்னத் திரும்பி வந்த கனகம்மாள், “ஒரு தரமா! இரண்டு தரமா கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் இலட்சந்தரம் படித்துப் படித்துச் சொன்னேன். பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பொருத்த மிருக்கிறதா இல்லையா வென்று பார்த்து கலியாணத்தைச் செய்யச்சொன்னேன்; அது காதில் துழையாமல் போய்விட்டது” என்று கூறிக்கொண்டே திரும்பவும் சமையலறைக்குள் சென்றாள்.

வீட்டில் மனைவியிடம் கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்டி, குண்டுச்சட்டியிற் குதிரை யோட்டி, வெளியில் யாவரிடத்திலும் இனிமையே வடிவாய் யாவருக்கும் நல்லவராய் ஒழுகி வரும் எத்தனையோ மனிதரை உலகம் கண்டிருக்கிறது. ஆனால், தஞ்சையின் டிப்டி கலெக்டரான நமது சாம்பசிவ ஐயங்காரோ ஊருக்கெல்லாம் பெருத்த புலி, வீட்டிற்கு மாத்திரம் எலி, பிறரைக் கெடுக்க வேண்டுமென்னும் பொல்லா மனதுடையவ ரன்றாயினும், அவர் தமது முன் கோபத்தாலும், அவசரபுத்தியாலும் தமக்குக் கீழிருந்த தாசில்தார்கள், ரிவின்யூ இன்ஸ்பெக்டர்கள், குமாஸ்தாக்கள், கிராம அதிகாரிகள், சேவகர்கள் முதலியோர் யாவரையும் திட்டி விடுவார். சேவகர் முதலிய சிப்பந்திகளை அடிப்பதும் வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் அவர் சுற்றுப் பிரயாணம் சென்று வல்லமென்னும் ஊரில் ஒரு சாவடியில் தங்கினார். காலையில் வெளியிற் சென்று தமது அலுவல்களை முடித்து விட்டு பகற் பன்னிரண்டு மணிக்கு சாவடிக்கு வந்து போஜனம் முடித்தார். சாதாரண ஜனங்கள் தமக்கு ஒழிந்த காலத்திலும், தாம் இன்புற்றிருக்கும் காலத்திலும் தமது குழந்தைகளை யெடுத்துக் கட்டி யணைத்து முத்தமிட்டு சீராட்டிப் பாராட்டி, அவற்றின் மழலை மொழிகளைக் கேட்டு அவற்றுடன் கொஞ்சி குலாவுதல் வழக்கமன்றோ, அவ்வாறு புது நாகரீகத்திற் பழகிய அதிகாரிகள் ஒழிந்த வேளையில், தமது பைசைக் (Bicycle) கிலுக்கு முகந்துடைத்து எண்ணெய் தடவி சீவிச் சிங்காரித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/20&oldid=1248087" இலிருந்து மீள்விக்கப்பட்டது