பக்கம்:மேனகா 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

மேனகா

இப்படிச் செய்து விட்டாரே, காரணமென்ன? நீர் அப்போது அங்குதானே இருந்தீர்?

தாந்தோ:- இந்த வெள்ளையர்களெல்லாம் குரங்குகள்; பேனெடுத்தாலும் எடுப்பார்கள், காதை அறுத்தாலும் அறுப்பார்கள்; நீங்கள் வரவில்லையென்று கோபித்துக் கொண்டே இருந்தான். உங்களுடைய கடிதத்தை டபேதார் கொண்டு வந்து கொடுத்தான். அது உங்களுடையது என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவன் கோபச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு, ஏதோ பதில் எழுதி டபேதாரிடம் அனுப்பியபின், என்னிடம் விஷயத்தைத் தெரிவித்து, தான் ஏதோ பெருத்த ஜெயமடைந்து விட்டதாக பெருமை பாராட்டிக்கொண்டான். எனக்கு அதைக் கேட்க நிரம்பவும் வருத்தமாக இருந்தது. என்ன அவனுடைய பாட்டன் வீட்டு சொத்தை நீங்கள் எடுத்துக்கொண்டது. வரக்கூடாத அவசரமென்றால், அதற்கு யார் தான் என்ன செய்வார்கள்? நான்தான் இருக்கிறேனே! என்னை வைத்துக்கொண்டு அர்ஜியை அனுப்புகிறதுதானே? அல்லது அது நாளைக்குத்தான் போகட்டுமே. மனிதருக்கு ஆபத்தென்றால், அதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொள்வதா? இவன்தான் திடீரென்று மாண்டு போகிறான்; அல்லது இவனுடைய துரைசானிக்குத் தான் வாந்திபேதி வந்துவிடுகிறது. அப்போது அர்ஜி எப்படிப் போகும்? தன்னைப் போலப் பிறரையும் பார்க்கவேண்டும். அதுதான் இந்தப் பயல்களிடம் கிடையாது. உண்மையில் அவசரமான காரியம் இல்லாதிருந்தால், தாங்கள் அவ்விதம் எழுத மாட்டீர்களென்று நான் சொன்னேன். அவர் அவசரமாக உங்களை வரச்சொல்லியிருந்தானாம். நீங்களே நேரில் வந்து ரஜாக் கேட்கவில்லையாம். இன்ன விஷயமென்றும் கடிதத்தில் குறிக்க வில்லையாம். எல்லாம் தான் என்கிற அகம்பாவம்; வேறொன்றுமல்ல.

சாம்ப:- (ஆத்திரமாக) நன்றாக இருக்கிறது! கடிதத்தில் எழுதும் காரியமும் உண்டு, எழுதாத காரியமும் உண்டு. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/230&oldid=1250887" இலிருந்து மீள்விக்கப்பட்டது