பக்கம்:மேனகா 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

மேனகா

விசனத்தினால் இன்று எனக்குப் பங்களாவுக்கு வரப் பிடிக்கவில்லை. இன்று காலை முதலே ரஜா வேண்டுமென்று எழுதினேன்” என்றார்.

தந்தி ஆபீசில் முன்னமேயே உண்மையை யறிந்து வந்திருந்தவரான தாந்தோனிராயர், “நீ பொய்சொல்லாத அரிச்சந்திரர் என்று எங்களிடம் ஆடம்பரம் செய்பவனல்லவா! இப்போது பொய் சொல்லுகிறாயோ! இருக்கட்டும்” என்று தமக்குள் நினைத்துக்கொண்டு, மிகவும் விசனத்தோடு, “அப்படியா குழந்தை மேனகாவுக்கா? இப்போது சமீப காலத்தில் தானே இங்கிருந்து புறப்பட்டுப் போனாள்? இங்கிருந்த வரையில் உடம்பில் ஒரு கெடுதலும் இல்லையே? இப்போது திடீரென்று என்ன வந்தது?” என்றார்.

சாம்ப:- (சிறிது தயங்கி) இன்ன வியாதி என்னும் விவரம் எழுதப்படவில்லை. நான் அவசியம் இன்றைக்குப் போயே தீரவேண்டும். அவ்வளவு அவசரம். துரை இப்படி மோசம் செய்துவிட்டாரே. இனிமேல் நானே அவரிடம் நேரில் போவதற்கும் என் மனதிற்குப் பிடிக்கவில்லை. அவர் ஏதாவது தாறுமாறாய்ப் பேசினால் எனக்கு நிரம்பவும் கோபம் வந்து விடும். அதனால் வீணில் காரியம் கெட்டுப்போம் - என்றார்.

தாந்தோனி:- (மிகவும் துயரமடைந்து, சாம்பசிவத்திற்கு வந்த துன்பத்தைத் தன்னுடையதாக மதித்தவராய் வேஷம் போட்டு) ஐயோ! என்ன தரும சங்கடமா யிருக்கிறதே! துரை இன்றைக்குச் செய்தது சுத்த அயோக்கியத்தனம்; மனிதருக்கு உயிருக்கு மிஞ்சிய ஆபத்து வேறென்ன இருக்கிறது? நீங்கள் வரவில்லையென்று கோபம் உண்டானால்தான் என்ன? என்ன காரணத்தினால் இவ்வளவு அவசரமாக ரஜா கேட்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தல்லவா காரியம் செய்யவேண்டும். சுத்தத் தடியடிக்காரன் வேலையாய் இருக்கிறதே. இந்த முரடன் கையில் ஒரு ஜில்லாவையே ஒப்புவித்துவிட்டார்களே! நான் எத்தனையோ கலெக்டர்களைப் பார்த்திருக்கிறேன்; எங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/232&oldid=1250892" இலிருந்து மீள்விக்கப்பட்டது