பக்கம்:மேனகா 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மேனகா

இருந்தபின், புருஷன் தன்னை அடித்து வருத்துவதாக தகப்பனுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதை இவர் ஒரு பெருத்த ஆதாரமாக வைத்துக் கொண்டு சேவக ரெங்கராஜு முதலியோரின் பக்க பலத்தோடு பட்டணம் போய் மருமகப் பிள்ளையை அடித்துவிட்டு பெண்ணைப் பலவந்தமாக அழைத்துவந்து விட்டார். சென்ற ஒரு வருஷகாலமாக பெண் இங்கேயே இருந்தது. அதற்குள் ரகசியம் நன்றாய் வெளியாகி விட்டது. விஷயம் இன்னதென்று நான் விரிவாகச் சொல்லவேண்டுவதில்லை யென்று நினைக்கிறேன். அவர் சுற்றுப் பிரயாணம் போகும்போ தெல்லாம் அவரும் பெண்ணுமே போவது வழக்கம். வீட்டிலிருந்தாலும் வெளியிற் சென்றாலும், அவருக்கும் பெண்ணுக்கும் ஒரு படுக்கைதான். சேவகர்கள், கிராம அதிகாரிகள், கிராமத்து ஜனங்கள் யாவரும் இதைக் கண்டு காரித் துப்புகிறார்கள். பெண் வீட்டுக்காரர், இவருடைய வீட்டிலுள்ள தாயார், மனைவி முதலிய யாவரும் இவரை வற்புறுத்தி தூஷித்தமையால் இரு வாரத்திற்கு முன் பெண்ணைக் கொண்டுபோய் விட்டார். இரண்டு நாளைக்கு முன் இவர் என்ன நினைத்துக்கொண்டாரோ என்னவோ இரகசியமாய்ப் போய் பெண்ணை அழைத்து வந்திருக்கிறார்; ஆனால், பெண்ணை வீட்டிற்கு அழைத்துவரவில்லை. வேறு எவ்விடத்திலோ இரகசியமாக வைத்திருக்கிறார். மருமகப் பிள்ளையின் தந்தியைப் பார்த்தவுடனே தமக்கொன்றுந் தெரியாதென்றும், தாம் பட்டணத்திற்கு வரவில்லையென்றும், பெண் இவ்விடத்தில் இல்லை யென்றும் பதில் தந்தி அனுப்பி விட்டார். தம்முடைய தாயாரும், தாமும் போய்ப் பட்டணத்தில் மருமகப்பிள்ளையோடு கட்டியழுது விட்டு வர உத்தேசம்போலிருக்கிறது. அதற்காகவே ரஜா கேட்டிருக்கிறார் - என்றார்.

அந்த வரலாற்றை கேட்டதுரை பெரிதும் வியப்படைந்து கல்லாய்ச் சமைந்து பேச்சு மூச்சற்று உட்கார்ந்துவிட்டார்; தாசில்தார் சொன்னது தந்திக்குப் பொருத்தமாக இருந்தது. மருமகப் பிள்ளை இல்லாத சமயத்தில், அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/248&oldid=1250929" இலிருந்து மீள்விக்கப்பட்டது