பக்கம்:மேனகா 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மேனகா

செய்வதில்லையாமே? வியாபாரத்திற்குப் பெண்ணிருக் கிறதென்று எழுத உங்களுக்கு வெட்கம், மானம் முதலியவை கூடவா இல்லாமற் போகவேண்டும்! சாமான்களை விலைக்குக் கொள்வதைப்போல வியாபாரம் செய்தால் இம்மாதிரியான துன்பந்தான் சம்பவிக்கும். இப்படிக் கலியாணம் செய்வதைவிட மாப்பிள்ளையை வி.பி. தபாலில் அனுப்பும்படி விளம்பரம் செய்வீர்களானால், அது இன்னம் சுலபமா யிருக்கும். தங்கமான பெண்ணை முன்பின் கண்டும் கேட்டு மறியாத ஒரு பைத்தியத்தினிடம் கொண்டுபோய்த் தள்ளி அவளை மீளாத வேதனைக்கு ஆளாக்கினர்கள். இரண்டு கெட்ட முண்டைகளும் நாசமாய்ப் போக; என் வயிறெரிகிற மாதிரி அவர்களுடைய வயிறு எப்போது எரியுமோ? இராவணன் குடியைக் கெடுக்க ஒரு சூர்ப்பனகை வந்தாள்; இந்தப் பைத்தியத்தின் குடியைக் கெடுக்க இரண்டு சூர்ப்பனகைகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கிற வரையில் அந்தக் குடும்பம் உருப்படப்போகிறதில்லை. நம்முடைய குழந்தையும் சுகப்படப் போகிறதில்லை என்றாள்.

சாம்பசிவலயங்கார்:- இனிமேல் என் உயிர் போனாலும் பெண்ணை அங்கே அனுப்ப மாட்டேன். இரண்டு புலிகளின் நடுவில் ஒருமான் அகப்பட்டுக் கொண்டு விடுபட வழியறி யாமல் வருந்துவதைப் போல அந்தத் துஷ்டர்களிடம் இவளிருந்து ஒருநாள் வாழ முடியாது. இவள் இனி இங்கேயே இருந்து விடட்டும், பாலியத்திலேயே விதவையாய்ப் போனதாக நினைத்துக் கொள்வோம்; பெண்கள் சுகப்படும் பொருட்டு புருஷன் வீட்டுக்குப் போவது வழக்கம்.துன்பங்கள் அனுபவிக்க யார் அனுப்புவார்கள்? கலியாணத்துக்கு மூவாயிரம் ரூபா கொடுத்தோம். சாந்தி முகூர்த்தத்திற்கு இரண்டாயிரம் ரூபா பெறுமானமுடைய சிறப்புகளைச் செய்தோம். நான் ஒன்றும் செய்யவில்லை என்று நாத்திமார் இருவரும் துஷிப்பதும் இடித்திடித்துப் பேசுவதும் கணக்கு வழக்கில்லையாம். ஒரு பிடி அரிசியெடுத்து பிச்சைக்காரனுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/26&oldid=1248093" இலிருந்து மீள்விக்கப்பட்டது