பக்கம்:மேனகா 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மேனகா

தன் கையிலிருந்த பெருத்த கீரைத்தண்டைக் கையிற் பிடித்த வண்ணமே டிப்டி கலெக்டருக்கெதிரில் தோன்றின காட்சி, அந்தக் கதாயுதத்தால் அவரை அடிக்க வந்ததைப்போல் இருந்தது. அம்மாள் ஆத்திரத்தோடு கையை நீட்டி, “உனக்கு தெரியா தப்பா! அந்த முண்டைகள் மருந்து போட்டு விட்டார்களடா! கலியாணத்திற்குப் பின் இவ்வளவு காலமாக அவன் இப்படியா இருந்தான்! வரவர அவர்களுடைய துர்போதனையும், மருந்தும் ஏறிவிட்டன வப்பா! அவன் இதைத்தானா செய்வான்? இன்னமும் ஆயிரம் செய்வான். அவன் மேற் குற்றமில்லை. எறும்பூறக் கல்லும் குழிந்து போகாதா! ஓயாமற் போதித்துப் போதித்து மனதில் விஷத்தை ஊட்டிக் கொண்டே வந்தால், கரையாத மனதும் கரைந்து போகாதா?” என்றாள்.

சாம்பசிவஐயங்கார், “அவன் கடைசியில் என்ன செய்தான் தெரியுமா? நான் பெண்ணை அழைத்துப் போக வேண்டு மென்று அவனிடத்திற் சொன்னேன். உடனே அவன் செருப்பை எடுத்துக்கொண்டு என்னை அடிக்க வந்தான். நல்ல வேளையாக நம்முடைய சேவக ரெங்கராஜூ அவனைத் தடுத்து மறைத்துக் கொண்டான். இல்லாவிட்டால், மிகவும் அவமானம் நேரிட்டிருக்கும்” என்றார்.

கனகம்மாள் விசனத்தோடு, “சரிதான்; மாமனாருக்குத் தகுந்த மாப்பிள்ளைதான். உனக்குக் கீழிருப்பவரை அடிக்காதே, வையாதே யென்று நான் எத்தனை தடவைகளில் சொல்லித் தலையில் அடித்துக் கொண்டும் நீ கேளாமற் செய்கிறா யல்லவா, அது வீணாய்ப் போகுமா? நமக்குக் கண்ணுக்குக் கண்ணான குழந்தைமேல், உன் பாபமூட்டை வந்திறங்கி விட்டதாக்கும். உம்; எல்லாம் தலைவிதியப்பா! காசைக் கொடுத்துத் தேளைக் கொட்ட விட்டுக் கொண்டதைப்போலப் பணத்தையும் கொட்டி, அருமையாய் வளர்த்த தங்கத்தையும் தாரை வார்த்தோம். என்ன செய்கிறது? பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும். அந்த துஷ்ட முண்டைகளால் உபத்திரவம் உண்டாகு மென்பது எனக்கு ஆரம்பத்திலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/28&oldid=1248095" இலிருந்து மீள்விக்கப்பட்டது