பக்கம்:மேனகா 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மேனகா

பொய்யுரைத்துப் பிரமாணம் செய்தது. அதிக உயரமும் குறுகலு மின்றி நடுத்தர உயரத்தையும், மிக்க பருமனும் மெலிவு மின்றி உருட்சி திரட்சியைக் கொண்ட உன்னத மேனியையும் பெற்றிருந்த அவளிடத்தில் பக்குவ காலத்து யெளவன மடமயிலார்க்கு உரிய விவரித்தற்கரிய வசீகரத் தன்மையும், காண்போர் கண்ணையும் மனத்தையும் ஒருங்கே கவரும் அன்றலர்ந்த அரவிந்தத்தின் தள தளப்பும், மென்மையும் மற்றெல்லா நலன்களும் கொள்ளையாய்ப் பொலிந்தன. யாதொரு மகவையும் பெறாத புதிய சோபனப் பெண்ணைப் போல ஒளிர்ந்து அஞ்சுகம் போலக் கொஞ்சும் அவ் வஞ்சிக்குத் தங்கம்மாள் என்று பெயர் சூட்டியது எத்தகைய பொருத்தம்! கொடிய குணத்தையும் கடிய மனதையுங் கொண்ட கரடி, புலி, சிங்கம் முதலிய விலங்குகளும் தம் பேடுகளைக் கண்டால் அடங்கி ஒடுங்கித் தம்து செருக்கை யிழந்து அவைகளின் காலடியில் வீழ்ந்து அவைகளை நாவினால் நக்கிக் கொடுத்து நைந்திளகு மென்றால், யாவர்மீதும் கோபங்கொள்ளும் சாம்பசிவ ஐயங்கார் அழகுக் குவியலாய்க் காணப்பட்ட தம் மனையாட்டியைக் கண்டு வெண்ணெயைப்போல் இளகி இன்பமாய் நின்றது விந்தையாமோ? மேன்மாடியி லிருந்த காந்தம் டிப்டி கலெக்டரின் சிகையைப் பிடித்து உலுக்கி மேலே இழுத்தது. அடுத்த நொடியில் அவர் மேலே சென்று அந்த வடிவழகியின் பக்கத்திற் பல்லிளித்து நின்றார்.


❊ ❊ ❊ ❊ ❊



2-வது அதிகாரம்

இராகு, கேது, சனீசுவரன்


செ
ன்னை, திருவல்லிக்கேணித் தொனசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஒரு சிறிய இல்லத்தின் கூடத்தில் ஊஞ்சல் பலகையின் மீது குதூகலமாக ஒரு யெளவன விதவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/30&oldid=1252312" இலிருந்து மீள்விக்கப்பட்டது