பக்கம்:மேனகா 1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

மேனகா

தோன்றியது. உடனே “மேனகா! அம்மா மேனகா!” என்ற ஒரு குரல், அருகில் உண்டாயிற்று; அந்தக் குரல் குயிலையும், குழலையும், யாழையும், பாகையும், தேனையும் பழித்ததாய், சங்கீத கானம் போன்றதாய், அமுதத் துளிகளையும் குளிர்ச்சியையும் ஒருங்கே சொரிந்து செவிகளில் இனிமையைப் பெய்வதாய் கணிரென்று சுத்தமாய் ஒலித்தது. எதிர்பாராத அந்தக் குரலைக் கேட்டுத் திகைத்த மேனகா, அது தேவகானமோ சாமகானமோ வென்று சந்தேகித்து வியப்புற்றாள். அது ஒரு பெண்மணியின் குரலென்பது சந்தேகமற விளங்கியது. தன்னை அபகரித்து வந்த மகம்மதியனது குரலுக்கும் இந்தக் குரலுக்கும் பெருத்த வேறுபாடு காணப்பட்டது. ஒன்றைப் பறையோசைக்கு ஒப்பிட்டால் இன்னொன்றை வீணா கானத்திற்கே ஒப்பிடல் வேண்டும். ஆதலின், இப்போதுண்டானது அந்த மகம்மதியனது குரலன்று என்பதும், இது ஒரு பெண்பாவையின் இனிய குரலென்பதும், எளிதில் விளங்கி விட்டன. தனக்கு அருகில் இருப்பது மகம்மதியனல்லன் என்றும், அது அவனது பணிப் பெண்ணாகவேனும் அல்லது உறவினளாகவேனும் இருக்க வேண்டும் என்றும் யூகித்துக் கொண்டாள். தனது உணர்வு அறிய தான் அன்னிய புருஷனைத் தீண்டியதான இழிவும் பாவமும் இல்லாமற் போனதைக் குறித்துப் பெரிதும் மகிழ்வடைந்தாள். ஆனால், அந்த அற்பமான இன்பமும் ஒரு நிமிஷமே மனதில் நிலைத்து நின்றது. ஏனெனில், தனது கற்பை ஒழிந்தது நிச்சயமே என்ற அருவருப்பு நினைவில் திரும்பவே அவளது மனக்களிப்பு கைப்பாக மாறியது. தான் கண்களைத் திறந்து தனக்கருகிலிருந்த அந்த மாதை, வெட்க மில்லாமல் பார்த்து எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்று நினைத்து மேனகா மனமாழ்கினாள். அவளது தேகம் குன்றியது. அவள் கண்ணைத் திறவாமலே இரண்டொரு நிமிஷ நேரம் கிடந்தாள். முன்னரே அறியாத அயலார் வீட்டில், அதுவும், அவனது கட்டிலின் மேல்தான் எவ்வளவு நேரம் அவ்வாறு கண்ணை மூடிப் படுத்திருத்தல் கூடுமென்றும், அப்படி யிருப்பதால் இழிவே யன்றி தனக்கு யாது பயனென்றும், தான் அவ்வாறு கிடப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/328&oldid=1251451" இலிருந்து மீள்விக்கப்பட்டது